ஞானம்

இந்த நாளிலே சாலமோனின் ஜெபத்தை தியானிக்கவிருக்கிறோம். ஒன்று ராஜாக்களின் புஸ்தகம் மூன்றாவது அதிகாரம் ஒன்பதாவது வசனத்திலே உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும் நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் உமது அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தை தந்தருளும்.

ஏராளமாய் இருக்கிற இம்மத்து ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.  இந்த ஜெபத்தை சாலமோன் கர்த்தரிடத்திலே ஏறெடுக்கின்றான்.  சாலமோன் கர்த்தரிடத்திலே அன்புக் கூர்ந்து தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளிலே நடந்தான்.  கர்த்தருக்கு பிரியமானதை செய்ய விரும்பினான்.  ஆண்டவருக்கு பயப்படுகிற பயத்தை தன் இருதயத்திலே வைத்திருந்தான்.  அவன் கிதியோனுக்கு சென்று அங்கேயிருந்த ஒரு பெரிய மேடையிலே ஆயிரம் தகன பலிகளை செலுத்தி ஆண்டவரை தொழுதுகொண்டான்.  கர்த்தரை மகிமைபடுத்தினான் அந்த இரவிலே கர்த்தர் சாலமோனுக்கு தரிசனத்திலே தோன்றி நீ விரும்புகிறதை கேள் என்று சொல்லி அவனிடத்திலே சொன்னார்.  அந்த வேளையிலேதான் இந்த சாலமோன் கர்த்தரிடத்திலே வேண்டுகிறான்.

உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க நன்மை தீமை இன்னதென்று வகையறுக்க எனக்கு ஞான இருதயத்தை தாரும் என்று சொல்லி வேண்டிகொள்கிறான். ஏராளமாய் இருக்கிற உம்முடைய ஜனங்களை யாராலே நியாயம் விசாரிக்க முடியும்? என்று சொல்லி ஆண்டவரிடத்திலே கேட்கிறான்.  ஜனங்களுடைய இருதயத்தின் எண்ணங்களை அறிந்து நன்மை தீமை என்ன என்று அறிந்து அவர்களுக்கு நீதி செய்ய வேண்டும். அவர்களுக்கு உண்மையான நல்ல நீதியை செலுத்தி அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அதற்காக தாவீது அந்த ஞான வரத்தை கேட்கிறான். கர்த்தர் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு எல்லா ஞான வரங்களையும் அவனுக்கு கொடுத்தார்.  கர்த்தருடைய கிருபை அவனைத் தாங்கிற்று.

கர்த்தாவே! உம்மிடத்தில் கேட்கிற உம்முடைய பிள்ளைகளுடைய ஜெபத்தை நீர் கேட்டு அவர்களுடைய மன விருப்பங்களை அறிந்து இந்த உள்ளான நோக்கத்திற்கு வேண்டிய பதில்களை நீர் உடனடியாக கொடுக்குறீர்.  நீர் பலபடுத்துகிறீர். நீர் சத்துரபடுத்துகிறீர். ஞான வரங்களை கொடுக்குறீர். எல்லா நன்மைகளையும் கொடுத்து ஆசிர்வதிக்கிறீர்.

எங்களையும் நீர் ஆசிர்வதிப்பீராக! நாங்களும் உம்மிடத்திலே மன்றாடுகிற மன்றாடுகளுகேற்ற பலத்தை கொடுக்கிறீர்.  கிருபை எங்களை தாங்கட்டும். இந்த நன்மைகள் எல்லாவற்றையும் உம்மை நோக்கி நாங்கள் மன்றாடுகிறோம். கர்த்தர் தாமே தங்களுடைய பிள்ளைகளை ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக!  ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com