நியூட்ரினோ ஆய்வகத்திற்கு இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்து விட்டது!

இந்திய அரசின் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை சிறப்பு திட்டமாக கருதி மார்ச் 5ம் தேதி நடந்த கூட்டத்தில் துரிதமாக அனுமதி அளித்துள்ளது. இந்த சந்திப்பில் கூடிய மத்திய நிபுணர் குழு, நியூட்ரினோ ஆய்வகத்தின் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் வனத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு, இந்த ஆய்வகம் நிறுவப்பட இருக்குமிடம் பல்வேறு சிறிய நீரோடைகளின் நீர் பாசன பகுதியாக இருப்பதாக கூறியது. மேலும் இந்த ஆய்வகத்தின் கட்டுமான பணிகள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டிருப்பதால் இந்த திட்டத்தை மதிப்பிட முடியாது என அறிவித்தது.

போடி மலைக்குள் சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் மற்றும் குகை அமைக்கப்பட இருப்பதால் மலைப்பாறைகள் வெடித்து, மலைக்குள் பாறைகள் சரிய வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் இவ்வித கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன் ஜியோடெக்னிக்கல் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி (1), மேற்கூறப்பட்ட மாநில அரசின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, நியூட்ரினோ ஆய்வகத்தை தேனியில் நிறுவ விரும்பும் “டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபார்மண்டல் ரிசர்ச்” நிறுவனம், எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் மக்களிடம் நியூட்ரினோ திட்டத்தை பற்றி பொது விவாதம் நடத்தவும் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என தெரிகிறது (1).

இந்நிலையில், நியூட்ரினோ திட்டம் தீங்கு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டால் இந்த திட்டம் எப்பொழுதும் அனுமதிக்கப்படாது என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

(1). https://www.thenewsminute.com/article/why-environmental-clearance-neutrino-project-tn-not-law-78783

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com