எதிரியிடத்தும் அன்பு காட்டுவோம்!

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை சவுல் ஏறெக்கிறதை நாம் பார்க்கிறோம். ஒன்று சாமுவேல் இருபத்தி ஆறாம் அதிகாரம் இருபத்தி ஐந்தாவது வசனத்திலே, என் குமாரனாகிய தாவீதே! நீ ஆசிர்வதிக்கப்பட்டவன். நீ பெரிய காரியங்களை செய்வாய். மென்மேலும் பலப்படுவாய். சவுல் தனக்கு எதிராளியாக இருக்கிற சத்ருவாகயிருக்கிறான்.

தன்னுடைய ராஜ்ஜிய பாரத்திற்கு தடை உண்டுபண்கிறவனாய் இருக்கிறான் என்று எண்ணிய தாவீதை இந்நாளிலே அவன் ஆசிர்வதிக்கிறதை நாம் பார்க்கிறோம். தாவீதை எந்நாளிலாகிலும் ஒரு நாளிலே உன்னை பிடித்து உன்னை கொன்றுபோட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டதான சவுல் சவுலை தேடிக்கொண்டே இருக்கிறான். இவ்விதமாக அவன் தாவீதை தேடி வருகிற பொழுது அவனுடைய இராணுவ வீரர்கள் சொல்கிறார்கள் அவன் சீப் வனாந்திரத்திலே தங்கி இருக்கிறான். ஆகிலாம் வீட்டிலே அவன் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்கிற செய்தியை அவனிடத்திலே சொல்கிறார்கள். ஆகவே சவுல் தன்னுடைய இராணுவ வீரர்களை எல்லாரையும் அழைத்துகொண்டு போய் அங்கே முகாம் இடுகிறார்கள். அவர்கள் ரதங்களோடும் இராணுவீரர்களோடும் சென்று அங்கே தங்கி இருக்கிறார்கள். இரவிலே அங்கே படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சவுலும் அவனுடைய படைத்தலைவனாகிய விசாயும் ஒரே இடத்திலே தங்கி இருக்கிறார்கள். அவர்களது தலைமாட்டிலே ஈட்டியும், தண்ணீர்செம்பும் இருக்கிறது. இந்த காட்சியை காணும்படியாக தாவீதும் அவனுடைய படைத்தலைவனுமாக கடந்து சென்று சவுலினுடைய தலைமாட்டிலே இருக்கிற ஈட்டியை எடுத்துகொள்கிறான்.

தண்ணீர் செம்பை எடுத்து கொள்கிறான். அதை எடுத்து கொண்டு வெகுதூரத்திலே வந்து எந்த மலையின் உச்சியிலே நின்றுகொண்டு அங்கே சவுலை கூப்பிட்டு அவனுடைய படைத்தலைவனை கூப்பிட்டு அபிஷேகம் பண்ண கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாவினை பாதுகாக்காமல் போனாய் என்று சொல்லி கூப்பிடுகிறான். இந்த சத்தத்தை கேட்ட சவுல் என் குமாரனாகிய தாவீதே! இது உன்னுடைய சத்தம் அல்லவா! நீ ஆசிர்வதிக்கப்பட்டவன், நீ பெரிய காரியங்களை செய்வாய், மென்மேலும் பலப்படுவாய் என்று சொல்லி அவனை வாழ்த்தி ஆசிர்வதிக்கிறதை நாம் பார்க்கிறோம்.

தாவீதுக்கு எதிராளி சவுல்தான். ஆனால் அந்த சவுல் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர். ஆகவே அவனை கொல்லுவதற்கு இடம் கொடுக்கவில்லை. அவனும் தன்னுடைய கையை சவுலுக்கு எதிராக நீட்டவில்லை. இந்த குணத்தை சவுல் பாராட்டுகிறான். என் குமாரனாகிய தாவீதே என் குமாரனல்லவா நீ ஆசிர்வதிக்கப்பட்டவன். பெரிய காரியங்களை செய்வாய். மென்மேலும் பலப்படுவாய்.

சத்ருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி உம்முடைய தலையை அபிஷேகம் பண்ணுகிற கர்த்தர் எதிராளியாகிய சவுல் மூலமாக தாவீதுக்கு இந்த ஆசிர்வாதமான வாழ்த்தும் நல்ல வார்த்தைகளும் கிடைக்கிறது என்று சொல்லி நாம் பார்க்கிறோம். நாமும் அவ்விதமாக நடந்துகொள்வோம். பிறரை நாம் பகைக்காமலும், கொலை செய்யாமலும் கொல்லையிடாமலும், அபகரித்து கொள்ளாமலும், தீங்கு செய்யாமலும் அவர்களுக்கு நாம் நன்மையாகவே காணப்படுவோம்.

கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பாராக. இரக்கமுள்ள ஆண்டவரே! சத்ருக்களை நேசிக்க உதவி செய்யும். கர்த்தருடைய ஊழியக்காரர்களை நேசிக்க உதவிசெய்யும் அவர்களுக்கு எதிராக நாங்கள் திட்டமிடாமலும் சதிசொற்பனையான காரியங்களை செய்யாமலும் அவர்களை துக்கப்படுத்தாமல் இருக்க நீர் எங்களுக்கு அருள் செய்வீராக! கற்றுகொடுப்பீராக! எதிராளிகளை நேசிக்கதக்கதான சுபாவத்தை தாரும். தாழ்மையை தாரும். பொறுமையை தாரும். நிதானத்தை தாரும். உம்மை பற்றிகொள்ளதக்கதான கிருபையை எங்களுக்கு தாரும். நீர் என்னோடும் எங்களோடும்கூட இருப்பீராக! பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் நாமத்தினாலே பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com