ஆலோசனை
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை தாவீது ஏறெடுக்கிறான். ஒன்று சாமுவேல் இருபத்தி இரண்டாம் அதிகாரம் முப்பத்தி மூன்றாவது வசனத்திலே நீ சொல்லிய ஆலோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக.
நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பலிவாங்காதபடிக்கும் நீ இன்றைய தினம் எனக்கு தடைபண்ணினபடியால் நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக. நீ சொல்லிய ஆலோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக. நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும் என்று சொல்லி தாவீது அபிகாயுளை ஆசிர்வதிக்கிறான். நாவாள் ஆகிய அபிகாயுளினுடைய கணவன் அந்த தாவீதுனுடைய நண்பர்களுக்கு உதவிசெய்ய மறுத்து தாவீது யார்? ஈசா யார்? என்று சொல்லி பல கேள்விகளை கேட்டு எனக்கு தெரியாதவர்களுக்கு என்னுடைய நன்மைகளை எடுத்து கொடுப்பேனோ என்று சொல்லி தாவீதுவினுடைய நண்பர்களை அனுப்பிவிட்டான். இந்த காரியத்தை அறிந்த நாவாளின் வேலையாட்களில் ஒருவன் அபிகாயுளின் இடத்திலே சென்று நாங்கள் எல்லாரும் கர்மவேல் பருவத்தினிலே எங்களுடைய ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த காலகட்டத்திலே தாவீதுனுடைய வேலையாட்கள் எங்களுக்கு அனுசரணையாக இருந்தார்கள்.
எந்த தீங்கும் எங்களுக்கு ஏற்படவில்லை. அப்படிபட்ட அவர்கள் இன்று நமக்கு ஒரு நல்ல வருமானம் கிடைக்ககூடிய இந்நாட்களிலே ஓர் உதவியை தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் நாவாள் அதை மறுத்துவிட்டான் நமக்கு தீங்கு வரலாம். ஆகவே நீர் ஞானமாக செயல்படும் என்று சொல்லி அபுகாயுளின் இடத்திலே சொல்கிறார். அபிகாயுள் உடனடியாக தன்னுடைய வீட்டில் இருந்து பதார்த்தங்களை எடுத்துகொண்டு போய் தாவீதை சந்திக்கிறார். சந்தித்து இந்த வார்த்தைகளையும் சொல்லுகிற ஒரு காரியத்தை நாம் பார்க்கிறோம். உம்முடைய ஆட்கள் வருகிறபொழுது நான் அங்கே இல்லை. நான் அதை அறியவில்லை. ஆனால் நான் ஒரு ஆலோசனையாக சொல்கிறேன் என்று சொல்கிறபோது தாவீது அதை மேல்வாங்கிகொள்கிறான். தன்னுடையதாக மாற்றிகொள்கிறான்.
நீ சொல்லிய ஆலோசனை ஆசிர்வதிக்கப்படுவதாக. நான் இரத்தம் சிந்தவராதபடிக்கும், என் கையே பலிவாங்காதபடிக்கும் நீ தடைபண்ணினபடியால் நீயும் ஆசிர்வதிக்கப்படுவாயாக! என்று சொல்வதை நாம் பார்க்கிறோம். இது ஒரு பெரிய நல்ல ஒரு முன்னுதாரணம்.
பெரியவர்களுடைய ஆலோசனைகள் சிறியவர்களுடைய ஆலோசனைகள் நம்மை பாதுகாக்கும். நம்மை பல தீமையான காரியங்களை செய்யவிடாதபடி தடுக்கும். அவ்விதமான மக்களை நாம் கனம் பண்ண வேண்டும். ஆசிர்வதிக்க வேண்டும். அவர்களும் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று அறிந்துகொள்ள வேண்டும். கர்த்தாவே இவ்வேளையிலே நாங்கள் உம்மை ஸ்தோத்திக்கிறோம். அபிகாயுள் தாவீதுக்கு ஆலோசனை சொன்னார். தாவீது அபிகாயுளான ஒரு பெண்ணினுடைய ஆலோசனையை அவன் அல்லல்தட்டவில்லை. அதை தன்னுடையதாக மாற்றிகொண்டான். ஒரு இரத்த பலிக்கு ஆளாகாதபடிக்கு இந்த அபிகாயுள் என்னை தடுத்து நிறுத்தினாள். அவள் ஆசிர்வதிக்கபட வேண்டும். கர்த்தர் அவளை ஆசிர்வதிப்பாராக! என்று சொல்லி அவளை வாழ்த்தி ஆசிர்வதிப்பதை நாம் பார்க்கிறோம்.
கர்த்தாவே! எங்களுக்கும் ஒரு நல்ல ஸ்லாக்கியத்தை தாரும். எங்களுக்கும் இந்த உணர்வுகளை தாரும் ஆண்டவரே! தீமைக்கும் பொல்லாப்பிற்க்கும் நாச மோசங்களுக்கும் நாங்கள் ஆளாகாதபடி எங்களை எச்சரிக்கை செய்கிறவர்களை நாங்கள் கனம்பண்ண நீர் எங்களுக்கு உதவி செய்வீராக கர்த்தாவே. நீர் எங்களுக்கு போதுமானவராக இருப்பீராக! நல்ல வழிகளிலே நடத்துவீராக! கிருபையின் கரத்தினால் தாங்குவீராக! பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் நாமத்தினாலே பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்