சிலுவையின் வார்த்தை 03:01 | ஸ்திரீயே, அதோ, உன் மகன்.
1. இயேசுவின் மேல் மரியாளின் பாசம்.
“ஸ்திரீயே, அதோ, உன் மகன்”. இது இயேசு சிலுவையில் சொல்லிய மூன்றாவது வார்த்தையாகும். இயேசுவின் தகப்பனாகிய யோசேப்பு சில ஆண்டுகளுக்கு முன் மரித்து போனார். இதன் பின்னர் மரியாளின் கவனம் யேசுவைப் பற்றியதாகவே இருக்கிறது. இயேசுவின் சகோதர சகோதிரிகளும் திருமணமாகி தங்கள் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர்.
ஆனால் இயேசு நசரேயனாக இருந்து பிதாவாகிய தேவன் தம்மை பூமிக்கு அனுப்பின திட்டத்தை நிறைவேற்ற யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பெற்று தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்தார். மரியாள் இயேசுவின் ஊழியத்திற்கு உறுதுணையாயிருந்தாள். யோவான் சீஷன் இயேசுவின் மீது அதிக பாசமாக இருந்தார். தான் தெரிந்து கொண்ட சீஷர்கள் எல்லாரிலும் இயேசு யோவான் மீது அன்பாயிருந்தார். அந்த யோவானையே தன் மரணத்திற்குப் பின் தன் தாய் மரியாளைக் கவனிக்கும் மகனாகக் கொடுக்கிறார். இது மரியாளுக்கும் மிகப் பிரியமாக இருந்தது.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Geralt [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.