கிருபை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் உங்களை இந்த ஜெபத்தின் மூலமாக ஆசிர்வதிப்பாராக! இந்நாளின் ஜெபத்தை யாக்கோபு ஏறெக்கிறதாக நாம்  பார்க்கிறோம். ஆதியாகமம் புஸ்தகம் நாற்பத்தி எட்டாம் அதிகாரம் பதினைந்தாவது, பதினாறாவது வசனத்திலே நாம் இவ்விதமாக பார்க்கிறோம்.

அவன் என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும் நான் பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் என்னை ஆசிர்வதித்து வந்த தேவனும் எல்லா தீமைக்கும் நீங்களாக்கி என்னை இரட்சித்த தூதனும் ஆனவர் இந்த பிள்ளைகளை ஆசிர்வதிப்பாராக. என் பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது என்று சொல்லி யாக்கோபு எகிப்திலே யோசேப்பையும், யோசேப்பினுடைய பிள்ளைகளையும் ஆசிர்வதிக்கிறதை நாம் பார்க்கிறோம். வாக்குதத்தத்தின் பூமியாகிய காணாதேசத்திலே பஞ்சம் ஏற்பட்டபொழுது, ஜனங்கள் எல்லாரும் வாழ்வுக்காக அல்லல்படுகிறார்கள்.

எகிப்திலே நல்ல தானியங்கள் கிடைக்கிறது என்பதை கேள்விப்பட்ட யாக்கோபு தன்னுடைய பிள்ளைகளை எகிப்திற்கு அனுப்புகிறான். அங்கே எகிப்திலே தானியங்கள் விற்கப்படுகிறது. அதே வேளையிலே, அந்த பொறுப்பான காரியத்தை நிர்வாகம் செய்துகொண்டிருக்கிறது யாக்கோபினுடைய செல்ல மகனாகிய யோசேப். ஆனால் யாக்கோபினுடைய பிள்ளைகளுக்கு தன்னுடைய சகோதரனாகிய யோசேப்தான் அங்கே இருக்கிறான் என்று சொல்லி அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையிலே அவர்கள் கடந்து செல்கிறார்கள். நாமும் இவ்விதமான நேரங்களிலே பிள்ளைகளை வாழ்த்துவோம் ஆசிர்வதிப்போம். நன்மையான காரியங்களை கட்டளை இடுவோம்.

கர்த்தர் நமக்கு பெரிய காரியங்களை செய்வாராக. இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உங்களை ஸ்தோத்திக்கிறோம். நன்றி செலுத்துகிறோம். யாக்கோபு தன்னுடைய பேரபிள்ளைகளை வாழ்த்தி ஆசிர்வதிக்கிறதை போன்று நாங்களும் எங்களுடைய பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் வாழ்த்தவும் ஆசிர்வதிக்கவும் அருள்செய்வீராக! அவர்களுக்கு நன்மையான காரியங்களை கட்டளையிட நீர் எங்களை போதிக்க வேண்டுமாக நாங்கள் ஜெபிக்கிறோம். கிருபை இருக்கட்டும் ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே! ஆமென். ஆமென்.

 

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com