சிலுவையின் வார்த்தை 02:03 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்.
3. தன் தவறை ஒத்துக்கொள்ளும் கள்ளன்
லூக்கா 23:41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்: இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துக் கொண்டான்.
“பாம்பின் கால் பாம்பறியும்” என்ற சொல்படி இரண்டு கள்ளர்களும் காலமெல்லாம் ஒன்றாக உண்டு உறங்கினார்கள். ஒரே தொழில், இரண்டு பெரும் கூட்டாளிகள். கொலையிலும், கொள்ளையிலும் கலகத்திலும் ஒன்றாகச் செயல்பட்டவர்கள். ஒருவனை ஒருவன் காட்டிக் கொடுக்காமல் அக்கிரமக்கிரியைகளை துணிந்து செய்தவர்கள். சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவன் ஏசுவுக்கு முன் தன்னை நிறுத்தி ஒப்பிட்டுப் பார்க்கிறான். தன் கிரியைகளை அறிகிறான். தங்களுக்கு கிடைத்த தண்டனையை சரியென்று ஒத்துக் கொள்கிறான்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Strecosa [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.