Nirav Modi Fraud Case | மொத்த வாராக்கடன் 57,519 கோடி ரூபாய்!

யார் இந்த நீரவ் மோடி?இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 280 கோடி ரூபாய் கடன் மோசடியும், சுமார் 11,600 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக பரிவர்தனையும் அரங்கேற்றியதற்காக தேடப்படுபவர் தான் இந்த நீரவ் மோடி. இந்திய பங்குசந்தை மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு முதலீட்டாளர்களை நஷ்டத்திற்கு காரணமாக இருப்பவர் இந்த நீரவ் மோடி. மேலும் இவரது உறவினர் ஒருவரின் உதவியுடன் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்தரவாத கடிதங்கள் மூலம் மொத்தம் 13,000 கோடி ரூபாய் கடன் வரை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு இவர் தப்பி ஓடிவிட்டார்.இதனால் வாராக்கடன் 57,519 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களின் விவரங்களை அறிய தனியார் துப்பறியும் நிறுவனங்களின் உதவியுடன் பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் மூலம் தங்களுக்கு தேவையான விவரங்களை சேகரித்து வாராக்கடனை திரும்ப பெறமுடியும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் நம்புகின்றனர்.

இன்று நீரவ் மோடி ஹாங்காங்கில் இருந்து தப்பி UK வழியாக அமெரிக்காவிற்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com