6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…2
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும்.
மன்னிப்பு யாருக்குரியது?
ஒரு கிராமத்தில் சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று யானையின் மணியோசை கேட்கிறது. நம்ம ஊருக்கு யானை வருகிறதென்று எல்லோருக்கும் சந்தோஷம். “யானைவரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்ற வாசகத்திற்கு இணங்க யானையின் மணியோசையைக் கேட்கிறார்கள். ஆனால் யானையை இன்னும் காணவில்லை. ஒரு சிறுவன்,அதோ தெருக்கோடியின் திருப்பத்தில் யானை வருகிறது என்று சொல்லி குதிக்கிறான். எல்லாச் சிறுவர்களும் அவனோடு சேர்ந்து ஆடுகிறார்கள். பெரியவர்கள் எல்லோரும் தங்கள் கைக்குழந்தைகளுடன் தங்கள் வீடுகளுக்கு முன் கூடுகிறார்கள். தேங்காய், பழம், காசு, இவைகளையெல்லாம் யானைக்கு கொடுத்து மகிழ்கிறார்கள். யானை தன் துதிக்கையால் சிறுவர்களைத் தொட்டு ஆசீர்வதிக்கிறது. யானையின் முதுகிலும் சிறுவர்களை உட்கார வைத்து யானைப் பாகன் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காட்டுகிறான். கரும்பு, தென்னை ஓலை, வாழை மரம் இவைகளையும் யானைக்கு பரிசாக கொடுக்கிறார்கள். யார் என்ன கொடுத்தாலும் யானை தன் துதிக்கையால் வாங்கி தின்னுகிறது.
ஒரு சிறு பையன் அவன் பங்காக தன் வீட்டிற்கு சென்று ரெண்டு தேங்காய் மூடி நிறைய சுண்ணாம்பை வைத்து நன்றாக மூடி யானைக்கு கொடுத்தான். யானையும் வாங்கி தன் வாய்க்குள் வைத்து சாப்பிட்டது. யானைக்கு ஒரு வித்யாசம் தெரிகிறது இனிப்புள்ள தேங்காய்க்கு பதிலாக சுண்ணாம்பை தின்று வாயெல்லாம் புண்ணாகிறது. யானைக்கு இது ஒரு புது அனுபவம். யானை தனக்கு நேர்ந்ததை யாரிடத்தில் சொல்லும்?
6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Arek Socha [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.