சிலுவையின் வார்த்தை 01:05 | பிதாவே இவர்களை மன்னியும்.
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:05 | பிதாவே இவர்களை மன்னியும்.
5. எருசலேம் மன்னிப்பைப் பெற்றதா?
மத்தேயு 23:37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கத்தரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சிகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று.
பன்னிரண்டு கோத்திரங்களின் அதிபதிகளெல்லாரும் எருசலேமில் வாழ்ந்து வந்தார்கள். தங்களை கோத்திரத்தாரின் நன்மைக்காக வாழ்ந்தார்களா? ஜனங்களின் பிரச்னைகளுக்கு நியாயமான தீர்ப்பு வழங்கினார்களா? ஜனங்கள் மத்தியில் நீதியையும் நியாயத்தையும் பரிசுத்தத்தையும் நிலைநிறுத்தி கர்த்தரை மகிமைப்படுத்தினார்களா? இயேசு இவர்களை மன்னிப்பாரா?
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Olaf [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.