சிலுவையின் வார்த்தை 01:02 | பிதாவே இவர்களை மன்னியும்.

ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:02 | பிதாவே இவர்களை மன்னியும்.

2. ஏரோது, பிலாத்து, போர்ச்சேவகர்கள் இவர்களில் மன்னிக்கப்படுவது யார்?

ஏரோது கலிலேயாவின் தேசாதிபதியாக இருக்கிறான். இவன் தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியை தன்னுடையவளாக்கிக் கொண்டான். யோவான் ஸ்நானகன் ஏரோதுவின் பாவச் செயலைக் கண்டித்தான். எனவே ஏரோது யோவான் ஸ்நானகனைச் சிறையில் அடைத்தான். ஏரோதியாளும் தன்னுடைய பாவச் செயலைக் கண்டித்ததினால் யோவான் ஸ்நானகனை ஒழித்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏரோதுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏரோதியாள் தான் ஏரோதுவுக்குப் பெற்றெடுத்த மகளை நடனம் பண்ணச் சொல்லி சபையோருக்கு முன் கபட நாடகத்தை அரங்கேற்றுகிறாள். தன் மகளின் நடனத்திற்கு பரிசாக யோவான் ஸ்நானகனின் தலையைத் துண்டிக்கச் செய்து தன் திட்டத்தை நிறைவேற்றி விடுகிறாள். இது பாவச் செயல் இல்லையா? இந்த பாவம் மன்னிக்கப்படுமா? இதற்கு உடந்தையான ஏரோதுவின் செயல் மன்னிக்கப்படுமா?

தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Jacqueline Macou [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com