61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது!
பஞ்சாப் மாநிலத்தில் 61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்து குறித்த விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மக்களின் அலட்சியப்போக்கால் நடை பெற்ற இந்த விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி ரயில் தண்டவாளத்திற்கு அருகே உள்ள மைதானத்தில் நடை பெற்றது. வழக்கம் போல் அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பட்டாசுகள் வெடித்தப்போது தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் ஏறி சென்றது. இதில் 61 பேர் உயிர் இழந்தனர். 70க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்நிலையில் விபத்து நேரிட்ட பகுதியில் காலை உள்ளூர் மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஞ்சாப் மாநில அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ரயில் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் போராட்டம் நடத்தியவர்களை போலீஸ் ரயில்வே தண்டவாளப் பகுதியிலிருந்து வெளியேற்றினர். இதற்கிடையே விபத்து தொடர்பாக நீதிபதி விசாரணைக்கு மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் இன்னும் 4 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் போராட்டம் நடத்தியவர்களை போலீஸ் ரயில்வே தண்டவாளப் பகுதியிலிருந்து வெளியேற்றினர். இதற்கிடையே விபத்து தொடர்பாக நீதிபதி விசாரணைக்கு மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் இன்னும் 4 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே விபத்து நடந்த அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் அமைச்சர் சித்துவின் மனைவி நவஜோத் கவுர் விபத்து நடை பெற்ற உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் இந்த புகாரை மறுத்துள்ள நவஜோத் கவுர் தாம் வீட்டிற்கு சென்ற பின்பு இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறியுள்ளார். விபத்து நிகழ்ந்த போது பலர் செல்பி எடுத்ததாகவும், செல்போனில் படம் பிடிக்கும் ஆர்வத்தில் மக்கள் தண்டவாளத்தில் நின்றதே விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ரயில் ஓட்டுனரிடம் போலீஸ் விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர் தமக்கு ரயிலை தொடர்ந்து ஓட்டி செல்ல பச்சை விளக்கு சமிக்கை கொடுக்கப்பட்டதாக கூறினார். நூற்றுக்கணக்கான மக்கள் தண்டவாளத்தில் நிற்கிறார்கள் என்று தமக்கு தெரியாது என்றும் கூறினார்.
இந்த விபத்தை குறித்து கருத்து தெரிவித்த ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் ரயில்வே நிர்வாகத்தின் தவறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். தண்டவாளத்தில் மக்கள் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்ற அவர் ஆளில்லாத கேட்டில் விபத்து நேரிட்டதை சுட்டி காட்டினார். இது போன்ற ஆளில்லாத ரயில்வே கேட்டில் மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர், ரயில் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறினார். இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே அனுமதியின்றி ரயில்வே பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.