6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…1
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:06 | பிதாவே இவர்களை மன்னியும்.
“அவனவனுடைய கிரியைகளுக்கு ஏற்ற பலன் என்னோடுகூட வருகிறதென்று” இயேசு சொல்கிறார்.
“எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்றும் இயேசு கூறுகிறார்.
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்று இயேசுவின் ஜெபத்தில் படிக்கிறோம்.
மேலும் நாம் இந்த உலகத்தில் என்னென்ன கிரியைகளை நடப்பித்தோமோ அதற்குரிய பலன்களை கர்த்தர் நமக்குக் கொடுப்பார். தீமையை ஜனங்கள் மத்தியில் விதைத்திருந்தால் தீமையின் விளைச்சலையே அறுவடை செய்ய வேண்டும். நாம் செய்த பாவங்களை மறைக்கிறவனுடைய வாழ்வு நஷ்டமாகவே இருக்கும். மனிதனிடத்தில் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்க வேண்டும். கர்த்தரிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டியவர்களுக்கு நாம் மன்னிப்பு கேட்டால் இயேசு மன்னிப்பார். யாராயிருந்தாலும் பாவம் செய்தவர்கள் தங்களைக் கிறிஸ்துவுக்கு முன்பாகத் தாழ்த்தினால் மனதுருக்கமுள்ள ஆண்டவர் நம்மை மன்னிப்பார். எனவே பிறர் நமக்குச் செய்த குற்றங்களை, தவறுகளை, தீமைகளை, நஷ்டங்களை, பழிகளை, அவதூறுகளை நாம் அவர்களுக்கு மனப்பூர்வமாய் மன்னித்துவிட்டால் கர்த்தர் நம்மை மன்னிப்பார். நம்முடைய பாவங்களையும், மீறுதல்களையும், அக்கிரமங்களையும் மன்னித்து நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளுகிறார். நாம் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கையில் கிருஸ்துவாகிய ஆண்டவரால் மன்னிக்கப்படாவிட்டால் பரலோக ராஜ்யம் போக முடியாது. இன்றே பாவத்தை அறிக்கை செய். மன்னிப்பையும், பரலோக வாழ்வையும் பெற்றுக் கொள். சிலுவையிலிருந்து நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் இவைகளே.
6. இயேசுவின் மன்னிப்பு எல்லோருக்கும் கிடைக்கும் | தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Susanne [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.