1. இயேசு யார்? | தொடரும்…1
சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும்.
இயேசுவின் ஊழியம் தேவாலயங்களிலேயே ஓய்வு நாள்தோறும் ஆகமங்களிலிருந்தும் தீர்க்கதரிசனப் புத்தகங்களிலிருந்தும் சத்திய வசனங்களை எடுத்து போதித்து வந்தார். ஜனங்கள் மத்தியில் இயேசு செய்த போதனைகளினால் நல்ல வரவேற்பும் ஆவிக்குரிய எழுச்சியும் ஏற்பட்டது. பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும் எச்சரித்துப் பேசினார். இயேசுவின் போதனைகளைக் கேட்பதற்கும் அவர்களிடத்திலிருந்து அற்புதங்களையும் அடையாளங்களையும் பெற்றுக் கொள்வதற்காகவும் பெருங்கூட்டமாய் ஜனங்கள் பின் சென்றனர். இதனால் ஆசாரியர்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும் இயேசுவின் மேல் பொறாமை கொண்டார்கள். இயேசுவின் போதனையில் குற்றங்கள் கண்டுபிடிப்பதற்காகவே சென்றனர். இவர்களில் யார் மன்னிக்கப்படுவார்கள்? பிரதான ஆசாரியன் இயேசுவின் சீஷன் யூதாஸ் யார் இவர்களில் மன்னிக்கப்படுவார்கள்?
1. இயேசு யார்? | தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By H. Zell (Own work) [CC BY-SA 3.0], via விக்கிமீடியா காமன்ஸ்.