1. இயேசு யார்? | தொடரும்…3
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 01:01 | பிதாவே இவர்களை மன்னியும்.
கேட்டும் உணராதவனாகவும், கிருஸ்துவைக் கண்டும் அனுபவியாதவனாகவும் வாழ்ந்தான். இயேசு தம்முடைய சீஷர்களோடு மேல் வீட்டில் கடைசி பஸ்காவைப் புசிக்கும் வேளையில் யூதாசுக்கு பகிர்ந்து கொடுத்த என் சரீரமாகிய அப்பம் என்னும் என் ரத்தமாகிய ரசம் என்றும் சொல்லிய வார்த்தைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. யோவான் சுவிசேஷகன் சொல்லும் வார்த்தைகள் கவனிக்கத்தக்கது. இராப்போஜனம் பண்ணினவுடன் பிசாசு யூதாசுக்குள் புகுந்தான் என்று குறிப்பிடுகிறான். யோவான் 13:27 அந்த துணிக்கையை அவன் வாங்கின பின்பு சாத்தான் அவனுக்குள் புகுந்தான் என்கிறான். மாற்கு 14:10 அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத் என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டி கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான். மத்தேயு 26:15 நான் அவரை உங்களுக்கு காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக் காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். பிரதான ஆசாரியனும் யூதாசும் யேசுவைக் கிரயம் பேசி முப்பது வெள்ளிக் காசுக்கு உடன்பட்டிருக்கிறார்கள். மோசேயின் நியாயப் பிரமாண புஸ்தகத்தை வைத்திருக்கிறவர்களும் அவைகளைப் போதிக்கிறவர்களும் சத்யபிரனாகிய ஏசுவுக்கு சீஷனுமாகிய யூதாசும் யேசுவைக் கொலை செய்வதற்கு அஸ்திபாரம் போட்டு விட்டார்கள். பணத்தை கொடுக்க சம்மதித்தவர்களும் வாங்கிக் கொள்ள சம்மதித்தவனும் தங்கள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. இவர்களில் யாரெல்லாம் மன்னிக்கப்படுவார்கள்?
1. இயேசு யார்? | தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Chris Light (Own work) [CC BY-SA 4.0], via விக்கிமீடியா காமன்ஸ்.