விண்ணப்பம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் எட்டாம் அதிகாரம் முதலாவது வசனத்திலே எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாய் இருக்கிறது. உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.

தாவீது தன்னுடைய மனதிலே ஆண்டவருடைய படைப்பின் மகத்துவத்தை சிந்தித்து அதை ஒரு ஜெபமாக விண்ணப்பமாக கொடுத்திருக்கிறதை நாம் பார்க்கிறோம். ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் ஸ்ரிஷ்டித்தார் என்று சொல்லிப் பார்க்கிறோம். உம்முடைய கண்களால் பார்க்க முடியாத தூரத்திலே வேறெந்த மகிமையுள்ள வானத்தை படைத்திருக்கிறார். அந்த வானத்திலே சூரியன், சந்திரன், நட்சத்திரக் கூட்டங்கள் இவைகள் எல்லாவற்றையும் படைத்து வைத்திருக்கிறார். இவைகள் எல்லாவற்றையும் ஆண்டவர் தம்முடைய வார்த்தையினாலே படைத்தார். அவைகளுக்கு ஜுவனில்லை, உயிரில்லை. ஆனால் ஆண்டவர் திட்டமிட்டபடி சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், காணப்படுகிற எல்லா கிரகங்களும் ஆண்டவர் வகுத்து கொடுத்த பாதைகளிலே நேர்த்தியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அவைகள் ஒன்றையொன்று நெருக்கி இடித்து சேதப்படுத்தவில்லை அல்லது ஓடாமல் நின்றுவிடவில்லை. எல்லாம் நேர்த்தியாக நடைபெறுகிறது. இதை கர்த்தரே செய்தார். ஆண்டவருடைய மகத்துவமான கிரியைகள் இவைகளை ஆசிர்வதித்து இருக்கிறது. இவைகளுக்கு நன்மையாக சந்தோஷமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நாமும் ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். அவர்களுடைய கரத்தின் கிரியைகளாய் இருக்கிற நாம் உயிர்வுள்ளவர்களாய் இருந்து அவருக்கு நாம் கீழ்படிகிறோமா? அவருடைய வார்த்தைகளுக்கு செவி சாய்க்கிறோமா? அவர் விரும்புகிறபடி வாழ்கிறோமா? என்று சொல்லி நாம் சிந்தித்து உணர்ந்து நம்மை கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். கர்த்தாவே! வானங்களெல்லாம் பூமிகளெல்லாம் உம்மை மகிமைப்படுத்துகிறது கர்த்தாவே! உம்முடைய வார்த்தையின் படியாக அவைகள் செயல்படுகிறது. எங்களுக்கும் உணர்வைத் தாரும். நீர் கற்றுகொடுத்த வேதத்தின் மகத்துவத்தின்படி நாங்கள் வாழ்ந்து உமக்கு மகிமை சேர்க்க நீர் அருள்செய்வீராக.

நீர் எங்களை உயிருள்ளவர்களாக படைத்து இருக்கிறீர். நாங்கள் உமக்கு மகிமை சேர்க்க வேண்டும் என்று சொல்லாலும் செயலாலும் உம்முடைய கிரியைகளானாலும் நாங்கள் உமக்கு உன்னவத்தமானர்வளாக பரிசுத்தமானவர்களாக வாழ்ந்து உமக்கு மகிமை சேர்க்க வேண்டும். அந்த மகத்துவத்தை நாங்கள் உமக்கு ஏறெடுக்கிறோம். உம்முடைய கிருபைக்கு எங்களை ஒப்பு கொடுக்கிறோம். நீர் எங்களோடுகூட இருப்பீராக. எங்கள் மூலமாய் பெரிய காரியங்களை செய்வீராக. இந்த தியான ஜெபத்திலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளும் ஆசிர்வதியும். அவர்களுடைய ஜெபங்களுக்கு ஏற்ற பலனைக் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தும். பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com