விடுதலை
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப்போகிறோம். சங்கீதம் முப்பத்தியொன்பது பன்னிரண்டில், கர்த்தாவே! என் ஜெபத்தை கேட்டு என் கூப்பிடுதலுக்கு செவிக்கொடும். என் கண்ணீருக்கு மௌனமாய் இராதேயும். தாவீதுனுடைய ஜெபத்தை நாம் இங்கு பார்க்கிறோம். என் ஜெபத்தை கேட்டு என் கூப்பிடுதலுக்கு செவிக்கொடும். உம்முடைய ஆண்டவர் ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறவர். இங்கே தாவீதினுடைய ஜெபத்திற்கு தாமதம் ஏற்பட்டதை அவன் உணர்ந்து அவரிடத்திலே மன்றாடுகிறான்.
ஆண்டவரே! நீர் கேட்கவில்லையா? நான் கூப்பிட்ட சத்தத்தை நீர் கவனிக்கவில்லையா? என் ஜெபம் உன்னுடைய சமூகத்திலே வந்து சேரவில்லையா? நீர் அதைக் கேட்பீராக. மனதுருக்கம் உள்ள ஆண்டவர் அந்த ஜெபத்திற்கு பதில் கொடுப்பீராக. ஆண்டவரே! என்னை தள்ளிவிடாதேயும், என்னை தூரப்படுத்திவிடாதேயும், என்னுடைய ஜெபத்தை கேளாதவர் போல் இருந்துவிடாதேயும் என்று சொல்லி அவன் மன்றாடுகிறான். நீர் செவிக் கொடுக்கிற தேவன்.
இரக்கமுள்ள ஆண்டவரே! நீர் எங்களோடுகூட இருந்து எம்முடைய எல்லா வேதனைகளில் இருந்தும் விடுதலை கொடுக்கிற தேவன். இன்னுமாக அவன் வேண்டிக்கொள்கிறான். என் கண்ணீருக்கு மௌனமாய் இராதேயும். உலகத்தால் நெருக்கப்படுகிறேன். பொல்லாதவர்களால் நிந்திக்கப்படுகிறேன். எல்லா இக்கட்டுகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளாயிருக்கிறேன் கர்த்தாவே! கர்த்தாவே! என் கண் கண்ணீரை சொறிகிறது. நீர் காண்கிற தேவன். இந்த கண்ணீரை கண்டு எனக்கு விடுதலை கொடுப்பீராக. நீரே சமாதானத்தை கொடுக்கிறவர். இருதயத்தின் துக்கத்தை வேதனையை எடுத்து போடுகிறவர். சஞ்சலத்தை மாற்றுகிறவர். உதவி செய்யும். கண்ணீரின் அந்த வேதனைகளில் இருந்து விடுதலை கொடுப்பீராக. இரக்கமுள்ள ஆண்டவரே! உலகத்து மக்களால் ஏற்படக்கூடுகிற நிந்தைகளும் அவமானங்களும் எங்களை அதிகமாக நெருக்குகிறபொழுது நாங்கள் உம்மை நோக்கி அபயமிடுகிறோம். ஜெபத்தை கேட்பீராக.
ஆபத்திலே இருந்து விடுதலை கொடுப்பீராக. எங்களுடைய கண்ணீர்களுக்கு பதில் கொடுப்பீராக. எங்களுடைய துக்கத்தை கவலைகளை மாற்றும். திகையாதே! கலங்காதே! நான் உன் தேவன் உன்னோடுகூட இருக்கிறேன் என்று சொன்ன ஆண்டவர் சகல ஆறுதலையும், தேறுதலையும் கொடுத்து உம்முடைய பிள்ளைகளை பலப்படுத்தவேண்டுமாய் கூட நாங்கள் ஜெபிக்கிறோம். நீரே இரக்கம் பாராட்டுவீராக. உம் நன்மைகள் எல்லாவற்றையும் எங்களுடைய அருமை இரட்சகர் ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்