வல்லமையுள்ள ஆண்டவர்
இந்த நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை பார்க்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் நாற்பத்தி இரண்டாம் அதிகாரம் இரண்டாவது, மூன்றாவது வசனத்திலே தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது. நான் எனக்கு தெரியாததையும் என் புத்திக்கு எட்டாததையும் நான் அறியாததையும் அளப்பினேன்.
தேவரீர்! நீர் இந்த உலகத்திலே நீர் சகலத்தையும் செய்ய வல்லமை உள்ள ஆண்டவராக இருக்கிறீர். நீர் சர்வ வல்லமையுள்ள ஆண்டவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது. யாராலும் எந்த மனிதனாலும் நீர் செய்கிற கிரியைகளை செய்ய முடியாது கர்த்தாவே! நீர் அதனதன் காரியங்களை அதனதன் நாட்களிலே நேர்த்தியாக செய்து அதை ஆசிர்வாதமாக நன்மையாக மாற்றிகொடுக்கிற தேவனாக இருக்கிறீர் கர்த்தாவே! ஆகவே ஆண்டவரே நீர் வல்லமையுள்ள ஆண்டவர், மனிதனல்ல! நீர் ஜுவனுள்ள ஆண்டவர். நீர் பராக்கிரமசாலி. சேனைகளின் கர்த்தர்.
நீர் சர்வத்தையும் செய்யவல்லவர். உம்முடைய காரியங்கள் தடைபடாது கர்த்தாவே. ஆனால் நானோ ஒரு சாதாரண மனுஷன். ஒரு புழுவாக காணப்படும் மண்ணோடுகூட ஒத்தவனாக இருக்கிறேன் கர்த்தாவே. தூசியும் துரும்புமான நான் எனக்கு தெரியாததை பேசுகிறேன் என் புத்திக்கு எட்டாததை நான் பேசுகிறேன். நான் அறியாததை அளப்புகின்றேன். என் வாயினாலே எதேதோவெல்லாம் பேசுகிறேன் கர்த்தாவே. எனக்கே தெரியவில்லை புத்தி பிசகி, அது அறியாமை கர்த்தாவே அது கீழ்படியாமை. திடமான காரியங்களினாலே நான் அளப்பிகொண்டிருக்கிறேன்.
நீர் கேட்டுகொண்டிருக்கிற கர்த்தர். நீர் எம்மை மன்னிப்பீராக. என்னுடைய அறியாமையின் வார்த்தைகளை நீர் எடுத்து போடுவீராக. கோபங்களை எடுத்துபோடுவீராக. இரக்கமுள்ள ஆண்டவரே! நன்மையை தாரும். அந்த கிருபைகளை தாரும். இரக்கமுள்ள ஆண்டவரே! நீர் சர்வத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்த காரியம் தடைபடாது.
யார் யாருக்கு என்னென்ன நன்மைகளை கிருபைகளை கொடுக்க வேண்டுமென்று சித்தம் வைத்திருக்கிறீரோ அந்த சித்தத்தை திட்டத்தை நிறைவேற்றும். நன்மைக்கெதிராக நடத்தும் பழக்கத்தையும் பயத்தையும் திகிலையும் எடுத்துபோடும். சமாதானத்தை சந்தோஷத்தை தந்தருளும். உம்முடைய பாதுகாப்பு பராமரிப்பு பிள்ளைகளோடுகூட இருப்பதாக. அறியாமையினாலும் ஆண்டவரே கீழ்படியாமையினாலும் முரட்டாத்தினாலும் நாங்கள் ஏதாகிலும் தவறாக பேசியிருந்தாலோ செய்து இருந்தாலோ அவற்றை எல்லாவற்றையும் மன்னிப்பீராக. தயையுள்ள கர்த்தர் எங்களுக்கு போதுமானவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். உம்முடைய கரங்களிலே எங்களை தாழ்த்தி அர்ப்பணிக்கிறோம். கிருபை எங்களோடு கூட இருப்பதாக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்