யோபுவின் ஜெபம்
இந்த நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபு ஏழாம் அதிகாரம் பதினேழாவது, பதினெட்டாவது வசனத்திலே, “மனுஷனை ஒருபொருட்டாக எண்ணுகிறதற்கும் அவன் மேல் சிந்தை வைக்கிறதற்கும் நிமிஷந்தோறும் அவனை சோதித்து அறிகிறதற்கும் அவன் எம்மாத்திரம்” இந்த வார்த்தைகளை யோபு கர்த்தரை நோக்கி சொல்கிறதை ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம். அங்கே பிள்ளைகள் எல்லாரையும் இழக்கக்கொடுத்தான்.
ஆடு மாடுகள், ஆசி பாசிகள் எல்லாம் அழிந்து போயிற்று. நிர்கதியாக நிற்கிற அவனை தேற்றும்படியாக அவனுடைய நண்பர்கள் எல்லாரும் வந்திருக்கின்றார்கள். அவர்களுடைய வார்த்தைகளினால் அவனை தேற்றமுடியவில்லை. ஆனால் யோபு உணருகிறான் என் ஆண்டவர்தான் இதை அனுமதித்து இருக்கிறார். என் ஆண்டவர்தான் என்னை பார்த்து கொண்டிருக்கிறார். அவருடைய கரத்தின் கிருபையாய் இருக்கிற யோபுவாகிய என்னை இந்த சர்வ வல்லமையுள்ள ஆண்டவர் ஒரு பொருட்டாக எண்ணி பார்க்க வேண்டியதென்ன. தினமும் அவன் மேல் சிந்தை வைத்து என்னை கவனித்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? மண்ணான இந்த மனுஷன் என்ன செய்துவிட முடியும்? கர்த்தர் என்னை தினமும் சோதித்து அறிய நான் எம்மாத்திரம் பலத்த கரத்தையுடைய ஆண்டவருக்கு முன்பாக நான் ஒன்றுமில்லை.
எந்த காரியங்களையும் செய்துவிடக்கூடிய சத்துவமுமில்லை. பலனுமில்லை. அப்படிப்பட்ட படைப்பாகிய ஒரு தூசுக்கு சமானமாய் இருக்கிறதான என்னை ஆண்டவர் கண்காணித்து கொண்டே இருக்கிறாரே! என்று சொல்லி ஏக்கத்தோடு கலக்கத்தோடு இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான்.
கர்த்தருடைய பிள்ளைகளே! அவர் நம்மை படைத்திருக்கிறார். கர்த்தாவே நீர் படைத்த மக்களை நீர் கண்ணோக்கி பார்ப்பீராக. உம்மிடத்திலே இருந்து நன்மைகளை எதிர்பார்க்கிற மக்களுக்கு கிருபையின் ஓரங்களை கொடுப்பீராக. சோதனைகளிலும் வேதனைகளிலும் பாடுகளிலும் கண்ணீர்களிலும் அவர்களுக்கு விடுதலை கொப்பீராக. அவருடைய துக்கத்தை மாற்றி சந்தோஷப்படுத்துவீராக.
நீர் அவர்களை சுற்றிலும் பாதுகாப்பாக இருப்பீராக. உம்முடைய அனுகிரகம் உம்முடைய கிருபையுள்ள கரம் உம்முடைய பிள்ளைகளோடு கூட இருப்பதாக. இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கு வேண்டிய சகல நன்மைகளை கொடுத்து சந்தோஷப்படுத்துவீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்