முற்றிலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக கேரளம் மாறியது
[ad_1]
கேரளம்: ஞாயிற்று கிழமை புதிய கொரோனா தொற்று ஏதும் இல்லாததால், முற்றிலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக கேரளம் மாறியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே. கே சைலஜா தெரிவித்தார்.
அம்மாநிலம் சிறிது நாட்களாக மிகவும் குறைவான கொரோனா பாதிப்புகளையே சந்தித்து வந்தது. மெலும், சனிக்கிழமை வெறும் இரண்டு புதிய கொரோனா பாதிப்புகள் மட்டுமே கேரளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர் கேரளாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 499ல் 95ந்து பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர் மீதி அனைவரும் வீடு திரும்பி உள்ளனர் என தெரிவித்தார்.
குண்ணூரில் அதிகம் பேர் பாதிப்பு
இந்த 95ந்து பேரில் குண்ணூரில் மட்டும் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இது சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியாகும்; இங்கு மட்டும் குறைந்த பட்சம் 21,720 பேர் கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் 32,217 இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவை முதலில் உறுதிப்படுத்திய மாநிலம்
இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா பாதிப்பை 2020 ஜனவரி மாதம் கேரளம் உறுதிப்படுத்தியது, சீனாவிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவரின் உடலில் இது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் மார்ச் மாதம் முதல் வாரம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. பின்னர் டப்லிகி ஜமாத் (Tablighi Jammat) டெல்லி மாநாட்டில் பங்கு கொண்டவர்களால் மற்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்தது.
நல்ல முன்னேற்றம்
இறப்பு மற்றும் குணமடைந்தவர்களின் விகிதாசார அடிப்படையில் கேரளம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுபடுத்துவதில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
[ad_2]