மன்றாடல்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம்.  சங்கீதம் முப்பத்தெட்டின் கீழ் கர்த்தாவே உம்முடைய கோபத்தில் என்னை கடிந்துக்கொள்ளாதேயும், உம்முடைய உக்கிரகத்தில் என்னை தண்டியாதேயும், இதுவும் தாவீதினுடைய மன்றாட்டு ஜெபமாக அமைகிறது.  உம்முடைய கோபத்தில் எம்மை கடிந்துக்கொள்ளாதேயும். நான் உம்முடைய நாமத்தை துக்கப்படுத்தியிருக்கிறேன், உம்முடைய வார்த்தைகளை நான் மீறியிருக்கிறேன், உம்முடைய கற்றலைகளை கற்பனைகளை நான் கடைபிடிக்கவில்லை.

ஆண்டவரே! என் மனதின் வழிகளிலே சென்று உம்மை துக்கப்படுத்தியிருக்கிறன். உமது மேலான சித்தத்தின் திட்டத்தையும் நான் அவமானபடுத்தியிருக்கிறேன், உம்முடைய பரிசுத்தமுள்ள நாமத்தை நான் துக்கப்படுத்தியிருக்றேன். ஆண்டவரே! உம்முடைய கோவத்தில் என்னை கடிந்துக்கொள்ளாதேயும்.  பாவிகளை இரட்சிக்கிர கர்த்தாவே! அடியேனுக்காக இரங்குவீராக. உம்முடைய உக்கிர கோபத்தினாலே என்னை தண்டித்துவிடாதிருப்பீராக.  நான் தவறு செய்திருக்கிறேன் கர்த்தாவே, மீறியிருக்கிறேன் கர்த்தாவே, உம்மை வேதனைப்படுத்தியிருக்கிறேன் கர்த்தாவே.

கர்த்தாவே! நான் இதை இப்பொழுது உணருகிறேன்.  பாவம் செய்கிற ஆத்மா சாகும், பாவத்தின் சம்பளம் மரணம், தண்டனை எனக்கு உரியது.  ஆனால் ஆண்டவரே! உம்முடைய இரக்கத்தை காட்டுவீராக.  உம்முடைய கிருபையை அருளசெய்வீராக.  உத்தம மனஸ்தாபத்தோடு உனக்காக என்னை தாழ்த்துகிற அடியேனை நீர் கண்ணோக்கி பார்ப்பீராக.

இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி பார்க்கிறோம். கர்த்தாவே! எங்களுடைய மீறுதல்களையும், எங்களுடைய குற்றம் குறைகளையும், எங்களுடைய பாவகிருபைகளையும் கர்த்தாவே நாங்கள் செய்த எல்லா அக்கிரமமான காரியங்களை அறிந்து நீர் நீதி செய்யக்கூடிய தேவன் கர்த்தாவே! நீர் தண்டித்து உணர்த்தக்கூடிய தேவன் கர்த்தாவே! ஆனால் இரக்கம் பாராட்டுவீராக.  இரக்கம் பாராட்டுவீராக.  மன்னித்து எங்களை மீட்டுக்கொள்வீராக.  உம்முடைய விலையேற்பற்ற இரத்தத்தினால் எங்களுக்கு மீண்டும் ஒருமுறை இரட்சிப்பைக்கொடுப்பீராக.  எங்களை காத்துக்கொள்ளும், எங்களை மீட்டுக்கொள்ளும், உமக்கு உகந்த பாத்திரமாக மாற்றும். எங்கள் அருமை இரட்சிகர் ஏசு கிருஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென் ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com