மனவலிமை
இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் முதலாம் அதிகாரம் இருபத்தி ஒறாவது வசனத்திலே நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலே இருந்து வந்தேன், நிர்வாணியாய் அவ்விடத்திற்கு திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்த்தோத்திரம். இந்த ஜெபத்தை பக்தனாகிய யோபு ஏறெடுக்கிறான்.
ஊக்ஸ் தேசத்திலே இந்த யோபு ஒரு உத்தமனாக சன்மார்க்கனாக தேவனுக்கு பயந்து பொல்லாப்பான காரியங்களுக்கு விலகி ஜீவித்து ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறவனாக இருந்தான். அவனுக்கு ஏழு குமாரர்களும் மூன்று குமாரத்திகளும் இருந்தார்கள். விஷேஷ நாட்களிலே அனைவரும் ஒன்றுகூடி வந்து அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள். அவ்விதமாக ஒருநாள் தன்னுடைய சகோதரனுடைய வீட்டிலே இருக்கிறபொழுது வயல்வெளியிலே மேய்ந்து கொண்டிருந்த எருதுகளையும் கழுதைகளையும் சபேயர் என்று சொல்லப்படுகிற பராக்கிரமமான மக்கள் வந்து வேலையாட்களை வெட்டி போட்டுவிட்டு அவைகள் எல்லாவற்றையும் ஓட்டி கொண்டு போய்விட்டார்கள். அதேபோன்று மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளையும் வேலையாட்களையும் வானத்திலிருந்து வந்து விழுந்த அக்கினி பட்சித்து போட்டது. வேலையாட்களும் மடிந்து போனார்கள்.
சபேயர் எல்லாரும், கர்தேவர் எல்லாரும் அவ்விதமாக வந்து ஒட்டகங்களை எல்லாம் கூட்டி கொண்டு போய்விட்டார்கள். வனாந்திரத்திலே இருந்து வந்த எபேசியர் கடுங்காற்றினாலே இந்த பிள்ளைகள் எல்லாரும் தங்கியிருந்த வீட்டின் மேல் மோதி அவர்கள் எல்லாம் சுவர்கள் இடிந்து விழுந்து எல்லோரும் மரித்து போனார்கள். ஆஸ்தி பாஸ்திகளை இழந்தாலும் பிள்ளைகளை இழந்தான். அந்த நேரத்திலே யோபு தன்னை தாழ்த்தி தரையிலே முகங்குப்புற விழுந்து நிர்பாணியாய் என் தாயின் கர்ப்பத்திலே இருந்து வந்தேன், நிர்வாணியாக நான் அவ்விடத்திற்கு திரும்புவேன்.
கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்று சொல்கிறான். உலக வாழ்வு உலகத்தின் மேன்மை சந்தோஷம் மகிழ்ச்சி எல்லாவற்றையும் கர்த்தர் கொடுக்கிறார். அதை அவர் திரும்பவும் எடுத்து கொள்கிறார். தான் விரும்புகிற நாளிலே அதை எடுத்து கொள்கிறார். அதை நமக்கு அதிகாரம் இல்லை. அதை உணர்ந்து யோபு ஜெபிக்கிறான். கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் அவருடைய நாமத்திற்கு ஸ்த்தோத்திரம் என்று சொல்கிறார். கர்த்தர் செய்கிறது நன்மையாக இருக்கும் அவருடைய கிரியையும் கிருபையும் நம்மை தாங்கும். அவருடைய ஆதரவு என்றென்றும் நமக்கு இருக்கும் என்று சொல்லி ஜெபிக்கிறான்.
கர்த்தாவே! இந்த ஜெபத்தை ஏறெடுக்கிற உம்முடைய பிள்ளைகளுக்கு மனதைரியத்தை தாரும் திடமான விசுவாசத்தை கட்டளையிடும் உம்முடைய தயையுள்ள கரம் உம்முடைய பிள்ளைகளாகிய எங்களோடு கூட எப்போதும் இருப்பதாக. இந்நாளில் இந்த ஜெபத்தை தியானித்து கொண்டிருக்கிற உம்முடைய பிள்ளைகளுக்கும் சகல ஆறுதலும் தேறுதலும் சமாதானமும் சந்தோஷமும் எப்பொழுதும் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்