Home / ஆன்மிகம் / மணவாளன் மார்பினிலே சாய்ந்திளைப்பாரிடவே…

மணவாளன் மார்பினிலே சாய்ந்திளைப்பாரிடவே…

மணவாளன் மார்பினிலே
சாய்ந்திளைப்பாரிடவே
உயிருள்ள நாட்களெல்லாம்
அலங்காரம் செய்திடுவேன்.

எருசலேம் வீதியிலே
என் நேசரை கண்டிடவே
ஓடி ஓடி சென்றிடுவேன்
அவர் மகிமையில் மகிழ்ந்திருப்பேன்.

என் பிரியமே ரூபவதி
என்று அழைத்திடும் சத்தம் கேட்குதே
என் நேசர் மடியில் அமர்ந்திடுவென்
முக முகமாய் தரிசித்திடுவேன்.

என் நேசர்
என்னுடையவரே
அவர் அன்பினாலே வாழ்ந்திடுவேன்
புத்தியுள்ள மணவாட்டியாய்
அலங்காரம் செய்துகொள்வேன்.

By David Jeba

Leave a Reply

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com