பொல்லாங்கு
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் ஐம்பத்தியொன்று நான்கில், தேவரீர்! ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்து உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன். தாவீதுனுடைய இன்னொரு முக்கியமான ஜெபம். தேவரீர், ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்தேன். என்னை படைத்தவராகிய ஆண்டவருக்கு விரோதமாகவே நான் பாவம் செய்தேன். எனக்கு ஜுவனை கொடுத்து வாழ்வு கொடுத்துகொண்டிருக்கிற உமக்கே நான் விரோதமாக பாவம் செய்தேன்.
என்னை இம்மட்டும் வழிநடத்தி வந்த உம்முடைய கிருபையை உணராமல் உமக்கு விரோதமாக நான் பாவம் செய்தேன். மட்டிமையோடு, பெருமையோடு நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். உம்முடைய பரிசுத்த நாமத்தை தூஷித்து பாவம் செய்தேன். உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்கு பதிலாக, ஆண்டவரே! அதை நான் அற்பமாக எண்ணிவிட்டேன். பாவம் செய்துவிட்டேன் கர்த்தாவே! உமக்கு விரோதமாகவே நான் பாவம் செய்துவிட்டேன். இரக்கமுள்ள ஆண்டவர் எனக்கு உதவி செய்வீராக. உம்முடைய கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்திருக்கிறேன். துணிகரம் கொண்டு பாவம் செய்திருக்கிறேன். நீர் விரும்பாத காரியங்களை செய்திருக்கிறேன். உம்முடைய மனதை நோகப்பண்ணியிருக்கிறேன்.
கர்த்தாவே! உம்மை துக்கப்படுத்தியிருக்கிறேன் கர்த்தாவே. நீர் பார்த்துக்கொண்டிருக்கிற பொழுதே நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். அவ்வளவு துணிச்சல் கர்த்தாவே. ஆண்டவரே! என்னை மன்னிப்பீராக. எனக்கு இரக்கம் பாராட்டுவீராக. நீர் எனக்கு உதவி செய்வீராக. நீர் ஒருவரே எனக்கு உதவி செய்யக்கூடிய தேவன் கர்த்தாவே! உத்தம மனஸ்தாபத்தோடுகூட என்னை தாழ்த்தி உமக்கு முன்பாக அற்பணிக்கின்றேன். கிருபையாய் கண்ணோக்கி பாரும். இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த வேளையிலும் உமக்கு முன்பாக எங்களை தாழ்த்தி அற்பணிக்கிறோம். உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். உம்முடைய கண்களுக்கு முன்பாக பாவம் செய்தேன்.
ஆண்டவரே! நீர் எங்களை மன்னிப்பீராக. பாவத்தின் தோஷத்தை எங்களில் இருந்து எடுத்து போடுவீராக. உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த மீண்டும் எங்களுக்கு ஒரு கிருபையைத் தாரும். உங்களுடைய கரத்தினால் எங்களை அரவணைத்து கொள்வீராக. பெரிய காரியங்களை செய்யும் எங்களுடைய நம்பிக்கையை எங்களுக்கு கைகூடி வரப்பண்ணும். கிருபை தாங்கட்டும். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்