பாரம்
இன்றைய நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் பதிமூன்றாம் அதிகாரம் இருபதாம், இருபத்தி ஒன்றாம் வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். இரண்டு காரியங்களை மட்டும் எமக்கு செய்யாதிருப்பீராக. உம்முடைய கையை என்னை விட்டு தூரப்படுத்தும். உம்முடைய பயங்கரம் என்னை கலங்கம் பண்ணாதிருப்பதாக.
ஆண்டவருடைய கரத்திலே இருந்து பல நன்மைகளை பெற்ற யோபு, தூசு தேசத்திலே ஆண்டவர் அவனை ஆசிர்வதித்து இருந்தார். ஏராளமான செல்வங்கள், செல்வாக்குகள் எல்லாம் அவனுக்கு இருந்தது. அநேக மக்களுடைய கண்களிலே அவனுக்கு தயை கிடைத்திருந்தது. அநேகருக்கு மத்தியிலே அவன் உண்மை உள்ளவனாக உத்தமனாக தேவனாக இருந்தான். அந்த நாட்களில் எல்லாம் அவன் ஆசிர்வதிக்கப்பட்டு இருந்தான். இப்பொழுதோ அவனுடைய குடும்பத்திலே நெருக்கம். அவனுடைய பிள்ளைகளை இழந்து போனான். எல்லா சொத்து சுகமும் ஆடு மாடுகள் ஒட்டகங்கள் வேலைக்காரர்கள் எல்லாரும் மடிந்து போனார்கள். ஒன்றுமில்லை. வெறுமையாக இருக்கிறான். அதை ஆண்டவர் தனக்கு ஒரு பாரமாக கட்டளையிட்டு விட்டாரோ என்று சொல்லி நினைக்கிறான்.
ஆண்டவருடைய அன்புள்ள கரமே அவனுக்கு பாரமாக காணப்படுகிறது. உம்முடைய கரத்தை என்னை விட்டு தூரப்படுத்தும் என்மேல் வைத்திருக்கிற உம்முடைய கரத்தை பாரமான கரத்தை எடுத்து விடுவீராக என்று சொல்லி மன்றாடுகிறான். இன்னும் உம்முடைய பயங்கரம் என்னை கலங்கம் பண்ணாதிருப்பதாக. நீர் பயங்கரமான காரியங்களை செய்கிறீர். வல்லமையான காரியங்களை நடப்பிக்கிறீர். அறியாத புரியாத காரியங்கள் எல்லாவற்றையும் நீர் செய்கிறீர்.
எங்களை எல்லாவற்றையும் பாதிக்கிற பொழுது மனதிலே கலக்கம் பயம் திகில் எல்லாம் ஏற்படுகிறது. அதுவே ஆண்டவரே நீர் என்னை கலங்கம் பண்ணாதிருப்பீராக என்று சொல்லி மன்றாடுகிறான். இவ்விதமான நெருக்கங்களிலே பாரங்களிலே காணப்படுகிற ஒவ்வொரு மக்களுக்கும் சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே இரக்கம் பாராட்ட வேண்டும். அவருடைய கரம் நன்மையே செய்ய வேண்டும். அவரிடத்திலே இருந்து ஆசிர்வாதங்கள் வர வேண்டும்.
இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி பார்க்கிறோம். எங்களுடைய சிறுமியை எடுத்து போடுவீராக. எங்களுக்கு ஏற்பட்டிருக்கிற நிந்தனைகளில் இருந்து விடுதலை கொடுப்பீராக. இரக்கமுள்ள ஆண்டவரே! நீர் தயவு செய்கிறவர். இரக்கம் பாராட்டுகிறவர். உம்மை நோக்கி பார்க்கிற உம்முடைய பிள்ளைகளுக்கு நன்மைகளை கொடுத்து சந்தோஷப்படுத்துகிறவர். நீர் அதிகமான நன்மைகளினால் உம்முடைய பிள்ளைகளை ஆசிர்வதித்து அருளும். உம்முடைய பாரம் உம்முடைய பயங்கரம் எங்களை தாக்காதபடிக்கு உம்முடைய சத்ருக்களை நடுநிலையிலே வைத்து எங்களை காத்து கொள்வீராக. கிருபையின் கரம் எங்களோடு கூட இருப்பதாக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்