பாதகம்
இன்றைய நாளில் ஏசு கிறிஸ்துவாகிய ஆண்டவரை கொலைசெய்ய வகைதேடின பாதகமான காரியத்தை நாம் தியானிக்கப் போகிறோம். மார்க் பதினான்காம் அதிகாரம் ஒன்றாவது, இரண்டாவது வசனத்திலே பிரதான ஆசாரியாரும் வேத பாதகரும் அவரை தந்திரமாய் பிடித்து கொலை செய்யும்படி வகை தேடினார்கள். தந்திரமாய் பிடித்து ஏசுவை கொலை செய்யும்படி வகை தேடினார்கள்.
தேவனாகிய கர்த்தர் மோசேயின் மூலமாக இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளைகளையும் கற்பனைகளையும் நியாய பிரமாணங்களையும் கொடுத்தான். அவைகளை ஜனங்களுக்கு போதிப்பதற்கென்று ஆசாரியார்களையும், லேவியர்களையும், வேத பாரகர்களையும், இன்னுமாக ராஜாக்களையும் ஏற்படுத்தி கொடுத்தான். நீதியும் நியாயமுமாக வாழ்ந்து பரிசுத்தமுள்ள ஆண்டவருக்கு மகிமை சேர்க்கவேண்டுமென்று அவர்களுக்கென்று கட்டளைகளை, கற்பனைகளை கொடுத்தார். ஆனால் யாரும் ஆண்டவருடைய கட்டளைகளை கடைப்பிடிக்கவில்லை.
ஒவ்வொருவரும் தங்களுடைய வசதிக்கு ஏற்றபடி, தங்களுடைய மன விருப்பங்களுக்கு ஏற்றபடி அவற்றை மாற்றி அதை வித்தியாசமாக போதித்து ஆண்டவருக்கு வேதனையை கொடுக்கிறவர்களாக காணப்படுகிறார்கள். ஆண்டவருடைய நோக்கம் அங்கே நிறைவேறவில்லை. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து ஏசு உலகத்திற்கு வந்தார். பிதாவாகிய தேவன் கொடுத்த கட்டளைகளையும் கற்பனைகளையும் சத்தியத்தை சத்தியமாக போதித்து அவர்களை உணர்த்தினார். இது வேதபாதகர்களுக்கும் ஆசாரியர்களுக்கும் மிகக் கடுப்பாக மாறிவிட்டது. ஆகவே அவர்கள் கொலை செய்ய முற்பட்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே நாம் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிசாய்ப்போம். நாம் கீழ்படிவோம்.
இரக்கமுள்ள ஆண்டவரே! எங்களுக்கு இரக்கம் பாராட்டுவீராக. நாங்கள் உங்களுடைய சத்திய வசனங்களினால் உணர்வடைந்து பரிசுத்தமுள்ள பிள்ளைகளாக உண்மையுள்ளவர்களாக நீதியுள்ளவர்களாக நாங்கள் வாழ வேண்டுமென்று சொல்லி உம்முடைய கட்டளைகளை கொடுத்தீரே. அவைகளின்படி வாழ எங்களுக்கு அருள் தாரும் கர்த்தாவே. நீடுதலான காரியங்களை எங்களிடத்திலருந்து எடுத்துபோடுவீராக. உம்முடைய தயையுள்ள கரம் எங்களோடுகூட இருக்கட்டும். நாங்கள் உம்மை மகிமைப்படுத்துவோம் கர்த்தாவே! ஏசு சிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்