பலனளிப்பவர்
இந்த நாளில் சாலமோனின் ஜெபத்தை தியானிக்கப்போகிறோம். சாலமோன் பல ஜெபங்களை ஏறெடுத்திருக்கிறான் அவைகளில் இதுவும் ஒன்று. ஒன்று ராஜாக்கள் எட்டு முப்பத்தேழில் இருந்து நாற்பதாவது வசனத்திலே தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், யாதொரு வாதையாகிலும், யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தில் வியாதியை உணர்ந்து அந்த ஆலயத்திற்கு நேராக தன் கைகளை விரித்து செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும் உம்முடைய வாசுசலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து அவனவன் வழிகளுக்கு தக்கதாக செய்து அவனவனுக்கு பலனளிப்பீராக.
இஸ்லேமினின் தேவாலயத்தை கட்டி பிரதிஷ்டி செய்த நாளிலே சாலமோன் ஒரு நீண்ட ஜெபத்தை ஏறெடுக்கிறான். பிரதேஷ்டிக்காக கூடிவந்த திரளான ஜனங்களை ஆசிர்வதிக்கிற நாளிலே அவன் பல ஜெபங்களை ஏறெடுக்கறான். தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருக்கிறான். அவைகளில் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. தேசத்திலே பஞ்சம், வாதைகள், கொள்ளை நோய்கள் வருகிறபொழுது அதை உணருகிறவர்கள் அதனால் ஏற்படக்கூடிய அழிவுகளைப்பற்றி அல்லது விபரீதக்காரியங்களைக் குறித்து உணருகிற மக்கள் ஆலயத்திற்கு முன்பாக வந்து நின்று பரலோகத்தின் தேவனை நோக்கி மன்றாடி ஏறெடுக்கிறபொழுது பரலோகத்தின் தேவனாகிய ஆண்டவர் நீர் கேட்டு அந்த ஜனங்களுக்கு நன்மை செய்வீராக!
அழிவில் இருந்து தண்டனைகளில் இருந்து கோபாக்கினிகளிலிருந்து விடுதலைக் கொடுத்து அவர்களை இரட்சித்துக் கொள்கிறார்கள் இந்த நாமம் தரிக்கப்பட்ட மக்களுக்கு நீர் இரக்கம் பாராட்ட வேண்டும் யாராக இருந்தாலும் எந்த தேசத்தானாக எந்த தியாகியானாக இருந்தாலும் உம்முடைய ஜெபத்தை கேட்டு நீர் அவர்களை மன்னித்து அவர்களை இரட்சிக்க வேண்டும் என்று சொல்லி மன்றாடிக் ஜெபிக்கிறான். கர்த்தாவே! இந்த ஜெபத்தை நாங்களும் ஏறெடுக்கிறோம். எங்களுடைய தேசத்தின் காரியங்களுக்காக ஜெபிக்கிறோம். இந்தக் கொள்ளை நோயின் நாட்களிலே எங்களுக்கு விடுதலை தரும்படியாக ஜெபிக்கிறோம். அழிவுகளில் இருந்தும், சங்காரத்தில் இருந்தும், நாச மோசங்களில் இருந்தும் விடுதலை கொடுப்பீராக. பொருளாதார நஷ்டங்களில் இருந்து ஜனங்களுக்கு விடுதலைக் கொடுப்பீராக.
கர்த்தாவே எல்லா நன்மைகளைத் தாரும். இழந்துப்போனவைகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் படியான பாக்கியத்தைத் தாரும் ஆண்டவரே! ஜனங்களுக்காக பரிதவிக்கிறேன் என்று சொன்ன ஆண்டவர் பெரியக் காரியங்களை செய்வீராக! இந்த ஜெபத்தை தியானிக்கிற ஒவ்வொருக்கும் உன்னுடைய நன்மைகளைக் கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவீராக! துதி கனம் எல்லாவற்றையும் ஏறெடுக்கிறோம். ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்