பண்டிகை
எசேக்கியா ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். ஒன்று நாலாகமம் முப்பதாம் அதிகாரம் பத்தொன்பதாவது வசனத்திலே தேவனை தேடும்படிக்கு தங்கள் இருதயத்தை நீராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கு ஏற்ற சித்தாங்கம் அடையாதிருந்தாலும் கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பீராக. இந்த ஜெபத்தை கீதாவின் ராஜாவாகிய எசேக்கியா ஆண்டவருடைய சமூகத்திலே மன்றாடி ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம்.
எசேக்கிய ராஜாவுக்கு முன்பாக இருந்த அநேக ராஜாக்கள் முறைமையின்படியாக பஸ்கா பண்டிகையை ஆசரிக்கவில்லை. அதை மறந்து போனார்கள். ஆண்டவருடைய ஆலயமும் எண்ணப்படாமல் போயிற்று. ஆகவே தாவீதின் வழிகளிலே உற்சாகமாக ஆண்டவருக்கு மகிமையான காரியங்களை செய்ய தீர்மானித்து செயல்பட்டு வந்ததான எசேக்கியா ராஜா பேர்ஷபா முதல் தான் வரைக்கும் எல்லா கோத்திரத்து ஜனங்களுக்கும் பஸ்கா பண்டிகையை ஆசரிக்கும்படியாக வாருங்கள் என்று சொல்லி ஒரு நிருபத்தை எழுதி அனுப்பினான். அநேகர்கள் எண்ணி பார்த்தார்கள். உற்சாகம் அடைந்தார்கள்.
எரிசலேமுக்கு நேராக பிராயணப்பட்டு வந்தார்கள். ஆனாலும் மோசேயின் மூலமாக பஸ்கா பண்டிகையை இவ்விதமாக ஆசரிக்க வேண்டும் என்று சொல்லி கர்த்தர் கட்டுபடுத்தி இருந்தாரோ அந்த முறைமைகளை பின்பற்றுவதற்கு அவர்கள் ஆயத்தமாகவில்லை. ஆவியிலும் ஆத்துமாவிலும் சரீரத்திலும் பரிசுத்தத்தோடு ஆண்டவருக்கு மகிமையாக பஸ்காவை ஆசரிப்பதற்கு அவர்கள் ஆயத்தமாகவில்லை. தங்களுடைய சரீரத்தை பரிசுத்தமான வாழ்வுக்கு நேராக ஒப்புகொடுக்கவில்லை. ஏநோதானோ என்று சொல்லி வந்திருக்கின்றார்கள். ஆனாலும் பஸ்கா பண்டிகையை ஆசரித்தார்கள். பஸ்காவை பூசித்தார்கள். இந்த காரியத்தை எசேக்கியா ராஜா கண்டு மன வேதனைப்பட்டு ஆண்டவருடைய சமூகத்திலே அந்த ஜனங்களை மன்னிக்கும்படியாக ஆண்டவருடைய இரக்கமும் கிருபையும் இந்த இயலாமையினால் இந்த பஸ்காவை ஆசரித்த ஜனங்களை ஆண்டவர் இரட்சிக்க வேண்டும். மீட்டுகொள்ள வேண்டும் என்று சொல்லி மன்றாடி ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம்.
கர்த்தருடைய பிள்ளைகளே! கர்த்தருடைய ஆலயத்திற்கு போகிறபொழுது எந்த பண்டிகை நாளாக இருந்தாலும் எந்த ஓய்வு நாளாக இருந்தாலும் அவருடைய சமூகத்தை நாடி தேடுகிற நாட்களிளெல்லாம் நாம் பரிசுத்தத்தோடு கூட நாம் கடந்து செல்வோம். கர்த்தர் சொல்கிறார் நாம் பரிசுத்தராய் இருக்கிறதுபோல நீங்களும் பரிசுத்தராய் இருங்கள். பரிசுத்தமுள்ள ஆண்டவரை மகிமைப்படுத்துவோம். நாம் ஆவியிலும் ஆத்துமாவிலும் சரீரத்திலும் சித்தாகமடைய வேண்டும். தாழ்மை வேண்டும் கிருபையை தேட வேண்டும். உன்னதத்தின் தேவனை நாம் மகிமைப்படுத்த வேண்டும். ஆண்டவர் நமக்கு அருள் செய்வார். கர்த்தருடைய பிள்ளைகளே! நாம் கர்த்தரை மகிமைப்படுத்துவோம். சொல்லாலும் வாழ்வாலும் கிருபையாலும் நம்முடைய எல்லா முயற்சிகளாலும் ஆண்டவருக்கு மகிமை செலுத்துவோம்.
நாம் ஆண்டவருடைய பரிசுத்தத்தை பின்பற்ற வேண்டும். கடைபிடிக்க வேண்டும். வாழ்ந்து காட்ட வேண்டும். ஆண்டவருக்கு மகிமை செலுத்த வேண்டும். இரக்கமுள்ள ஆண்டவரே இந்த வேளையிலும் இந்த ஜெப தியானத்தை தியானிக்கிற உம்முடைய பிள்ளைகளுக்கு கிருபையைத் தாரும். அவர்கள் தங்களை பரிசுத்தமாக காத்து கொள்ள நீர் அருள் செய்வீராக. அறியாமையினாலோ தெரியாதனாலோ ஆண்டவரே அந்த பரிசுத்தத்தை ஒருவேளை மீறி இருந்தால் நீர் மன்னிப்பீராக! இரக்கம் பாராட்டுவீராக! கிருபை செய்வீராக கர்த்தாவே! உம்முடைய ஆலயத்திற்கு நேராக தங்களை தாழ்த்தி அற்பணித்து மன்றாடி வேண்டி கொள்கிற ஒவ்வொரு பிள்ளைகளுடைய ஜெபத்திற்கு ஏற்ற பலனை தாரும். நீரே இரட்சிக்கிறவர். நீரே பரிசுத்தப்படுத்துகிறவர். உங்கள் கிருபையை எங்களுக்கு விளங்கப்பண்ணும். இந்த நன்மைகளைத் தாரும். ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்