தமிழக அரசு ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு ஓய்வு வயது உயர்வு சலுகை கிடையாது!
[ad_1]
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று, மேலும் பணி நீட்டிப்பு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது ஊதிய உயர்வு குறித்த அரசாணை பொருந்தாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு இவ்வாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி பிறப்பித்த ஆணையின்படி தங்களுக்கும் வழங்கக்கோரி ஆசிரியர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்து வந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இதே மனுக்கோரிக்கையுடன் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்று, கல்வி ஆண்டு முடிய பணி நீட்டிப்பு பெற்ற, ஐம்பதிற்க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு வயது உயர்வு அரசாணையின் பலனை கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் விசாரித்த போது, மனுதாரர்கள் பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்றுள்ள காரணத்தால், இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது என மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.
[ad_2]