படைவீரர்கள்
இன்றைய நாளிலே நாம் யோவாபின் ஜெபத்தை தியானிக்கபோகிறோம். ஒன்று நாலகமம் பத்தொன்பதாம் அதிகாரம் பதிமூன்றாம் வசனத்திலே நாம் நம்முடைய ஜனத்திற்காகவும் நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடங்கொண்டிருக்க கடவோம். கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக! இந்த ஜெபத்தை யோவாப் தன் சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக சொல்கிறான்.
பெலிஸ்தியர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக யுத்தத்திற்கு வந்திருக்கிறார்கள். அவருடைய படைகள் எதிரும் புதிருமாக அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். பெலிஸ்தியர் அம்மோனியரோடும் திரளான ரதங்களோடும் அங்கே கூடி வந்திருக்கிறார்கள். இந்த வேளையிலே பெலிஸ்தியரையும் அம்மோனியரையும் எதிராக கூடி வந்திருக்கிற இராணுவ வீரர்களையும் இந்த யோவாப் சந்தித்து ஆக வேண்டும்.
எதிரும் புதிருமாக இருக்கிற படைகளை சந்திப்பதற்காக ஒரு பகுதி படைவீரர்களை தன்னுடைய பார்வையிலும் இன்னொரு பகுதி படைவீரர்களை தன்னுடைய சகோதரனாகிய அபிசாயிடம் ஒப்புகொடுத்து ஆண்டவர் பேரிலே நம்பிக்கை வைக்கும்படியான வார்த்தைகளை அங்கே சொல்கிறான். நான் நம்முடைய ஜனத்திற்காக பணிவிடை செய்ய வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பிற்காக கிரியை செய்ய வேண்டும். நம்முடைய கர்த்தர் நமக்கு கொடுத்த பட்டணங்களை நாம் காவல் காக்கும்படியாக நாம் நல்ல பணியாற்ற வேண்டும். நாம் நம்முடைய கடமைகளை செய்கிற பொழுது ஆண்டவர் தமது பார்வைக்கு நலமானதை செய்வார். அவர் நம்முடைய உழைப்பிற்கும் பிரயாசத்திற்கும் ஏற்ற பலனை கொடுத்து அவர் நம்மை ஆசிர்வதிப்பார் என்று சொல்லி திடப்படுத்துகிறதை தைரியப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளே இந்த உலக வாழ்க்கையிலே நாம் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கிறது. அந்த சூழ்நிலைகளிலெல்லாம் நாம் பரலோகத்தின் தேவனை நோக்கிபார்க்க வேண்டும். அவருடைய தயையுள்ள கரத்தின் உதவியை நாம் எதிர்பார்க்க வேண்டும்.
நம்முடைய ஜெபத்தை நாம் ஆண்டவருடைய சமூகத்திலே நாம் ஏறெடுக்கிறபொழுது கர்த்தர் நமக்கு செவிகொடுத்து உதவி செய்து நம்மை ஆசிர்வதிப்பார். இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த ஜெபத்தை தியானிக்கிற வேண்டிகொள்கிற ஒவ்வொரு மக்களுக்கும் உதவி செய்வீராக. தம்முடைய வாழ்க்கையிலே ஏற்படுகிற எல்லா தடைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியிலே உம்மை நோக்கி வேண்டி கொள்கிற நம்முடைய மக்களுடைய ஜெபத்திற்கு ஏற்ற பலனை தந்தருளுவீராக! அவர்களுடைய வாழ்க்கையிலே அதிசயங்களை செய்து அற்புதங்களை செய்து அவர்களை ஆசிர்வதிப்பீராக!
கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக! என்று சொன்னபடி நன்மை செய்கிறவர் கைவிடாத நேசர் இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்வீராக! கிருபையினால் தாங்குவீராக பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் நாமத்தினால் பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்