பகைமை வேண்டாமே!

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.  கர்த்தர் உங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் கட்டளை இடுவாராக. இந்நாளின் ஜெபத்தை ஈசாக்கு ஏறெடுக்கிறதை நாம் பார்க்கிறோம்.

ஆதியாகமம் புஸ்தகம் இருபத்தி எட்டாம் அதிகாரம் மூன்றாவது, நான்காவது வசனத்திலே நாம் இவ்விதமாக பார்க்கிறோம். சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னை ஆசிர்வதித்து நீ பல ஜனகூட்டம் ஆகும்படி உன்னை வலுகவும் பெருகவும் பண்ணி, தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்ததும் இப்பரதேசியாய் தங்குறதுமான தேசத்தை நீ சுதந்திரித்துகொள்ளும்படி ஆபிராகாமுக்கு அருளிய ஆசிர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று ஈசாக்கு இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். தன்னுடைய இளைய மகனாகிய யாக்கோபுக்காக இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறான். அங்கே ஈசாக்குனுடைய மூத்த மகனாகிய ஏசாவினுடைய ஷேஸ்த்திர புத்தர பாக்கியத்தை ஏற்கனவே யாக்கோபு பயிற்றம் கோளினாலே வாங்கி கொண்டான்.

ஈசாக்கினுடைய முதிர்ந்த வயதிலே தன்னுடைய மூத்த மகனாகிய ஏசாவை ஈசாக்கு அழைத்து நீ வனாந்திரத்திற்கு சென்று வேட்டையாடி அதை எனக்கு சமைத்து கொண்டு வா, நான் புசித்து நான் உன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று சொல்லி வேண்டிகொள்கிறார். அதன்படியாக அவன் வேட்டைக்கு சென்று விடுகிறான் ஏசா. ஆனால் ஈசாக்கினுடைய மனைவியாகிய ரெபேக்காள் இந்த காரியத்தை கேட்டு, இளைய மகனாகிய யாக்கோபை இதற்காக ஆயத்தப்படுத்தி ரெபேக்காளே சமைத்து கொடுத்து யாக்கோபுவினுடைய கையிலே கொடுத்து அதை தன் தகப்பனுக்காக கொண்டு சேர்க்க சொல்கிறாள். அதை புசித்து சந்தோஷப்பட்டு ஆசிர்வதிக்கிறான். அதற்கு அப்புறமாக இவ்விதமாக தன் சகோதரனுடைய ஆசிர்வாதத்தை எடுத்து கொண்ட காரணத்தின் நிமித்தமாக ஏசா சகோதரனாகிய யாக்கோபின் பேரிலே கோபம் கொள்கிறான் எரிச்சலடைகிறான் வீணான சண்டைகளும் சச்சரவுகளும் பகைகளும் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஈசாக்கு தன்னுடைய இளைய குமாரனாகிய யாக்கோபை அழைத்து அவனை ஆசிர்வதித்து தன் மனைவியாகிய ரெபேக்காளுனுடைய சகோதரன் லாமாவினுடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கிறதை நாம் பார்க்கிறோம். இவ்விதமாக அனுப்பி வைக்கிறபொழுது இந்த ஜெபத்தை ஈசாக்கு எறெக்குகிறார்.

சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னை ஆசிர்வதித்து நீ பல ஜன கூட்டமாகவும் உன்னை வலுகவும் பெருகவும் பண்ணி, முற்பிதாக்களுக்கு கொடுத்த வாக்குதத்தத்தின் எப்போதுமே நீ சுதந்திரித்து கொள்ள செய்வாராக! என்று சொல்லி ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளே எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நெருக்கங்களிலும் கசப்பான சூழ்நிலைகளின் மத்தியிலும் நாம் வீணான வாக்குவாதங்களுக்கு சண்டை சச்சரவுகளுக்கு இடம் கொடுக்காமல் ஒவ்வொருவரையும் நாம் ஜெபித்து அவர்களை கர்த்தருக்கு உள்ளாக வழிநடத்தி வேண்டிய பொறுப்புள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்குள்ளோ உறவினற்களுக்குள்ளோ பகைமையை தோற்றுவிக்க கூடியதான காரியங்களை நாம் சொல்லாதபடி கவனமாக நடந்துகொள்ள கர்த்தர் நமக்கு அருள் செய்வாராக!

கிருபையுள்ள ஆண்டவரே! உம்மை ஸ்தோத்திக்கிறோம். இந்த ஜெபத்தினால் எங்களுக்கு நன்மையை தாரும். சகோதரர்களை நேசிக்க அன்புகூற அருள்செய்யும். நீர் எங்களை கற்றுகொடுத்து போதித்து உணர்த்தி உருவாக்குவீராக! வல்லமையுள்ள ஆண்டவர் எங்களை சகோதர பாசத்திலே அன்னோன்யத்திலே ஐக்கியத்திலே சந்தோஷத்திலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக! ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே! ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com