நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி!
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் பனிப்பொழிவால் கடும் குளிர் நிலவிவருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், புல்வெளி, பூங்கா மற்றும் மலை சரிவுகளில் காஷ்மீர் போன்று காட்சி அளிக்கிறது. ஆனால் இங்குள்ள தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கடுமையான பனி பொழிவதால் அங்குள்ள தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக அரசிடம் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நீலகிரி மட்டவட்டப்பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனி தொடரும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.