நீர் ஒருவரே தேவன்

இன்றைய நாளில் யோபுவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். யோபுவின் புஸ்தகம் பதினேழாம் அதிகாரம் மூன்றாவது வசனத்திலே தேவரீர்! என் காரியத்தை என் மேல் போட்டு கொண்டு எனக்காக பணிபுரிவீராக. வேறு யார் எனக்கு கைகொடுக்கதக்கவர்? யோபு இந்த விண்ணப்பத்தை ஆண்டவரிடத்திலே சொல்கிறதை நாம் பார்க்கிறோம். என் காரியத்தை மேற்போட்டு கொள்வீராக.

நீரே என் பாரங்களை கவலைகளை, கண்ணீர்களை, துக்கங்களை எல்லாவற்றையும் உமது மேல் ஏற்றி கொள்வீராக. நான் வேறே யாரிடத்திலே இறக்கி வைக்க முடியும். யார் என்னுடைய சுமைகளில் இருந்து விடுதலை கொடுக்க முடியும். நீர் ஒருவரே எங்களை விடுவிக்கிறவர். நீர் ஒருவரே எங்களை தாங்குகிறவர். தாங்குவேன், சுமப்பேன், தப்புவிப்பேன் என்று சொன்னீரே அந்த வார்த்தையின்படியாக நீர் எனக்கு உதவி செய்யும். எங்கள் பிரச்சனைகள் எல்லாவற்றையும் நீர் ஏற்று கொள்வீராக.

நீர் தவிர வேறு எந்த மனுஷன் எமக்கு கை கொடுக்கமுடியும். எம்முடைய துக்கத்தை மாற்றமுடியும். வேறு யாராலும் எமக்கு உதவி செய்யமுடியாது. அவர்கள் எல்லாரும் மனிதர்கள். சற்றுநேரம் ஆறுதலாக இருப்பார்கள். மற்றபடியாக கடந்து போய்விடுவார்கள். வேதனைகள்தாம் எமக்கு மிஞ்சும். ஆனால் நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனாக இருக்கிறீர். நீர் எப்பொழுதும் எங்களுக்கு அன்பு செலுத்தி இரக்கம் பாராட்டி எங்களை ஆசிர்வதிக்கிற தேவனாக இருக்கிறீர். உங்கள் வல்லமையுள்ள கரம் எங்களோடு கூட இருப்பதாக. என்னோடு கூட இருப்பதாக.

இரக்கமுள்ள ஆண்டவரே! எங்களை சந்தோஷப்படுத்துவீராக. எனக்காக நீர் பிணைப்படுவீராக. என் பாரத்திற்கும் துக்கத்திற்கும் எந்தெந்த வகையிலே விடுதலை கொடுக்கமுடியுமோ அவை எல்லாவற்றையும் நீரே செய்வீராக. இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை நோக்கி பார்க்கிறோம். உம்முடைய கிருபைக்காக கெஞ்சி நிற்கிறோம். கர்த்தாவே! நீரே எங்களை பலப்படுத்தும். பிணைப்படுவீராக. எங்களுடைய பாரங்களை ஏற்று கொள்வீராக. எம் துக்க நாட்கள் முடிய போகும் என்று சொன்ன உங்களின் வார்த்தையின்படியாக எங்களுக்கு சகல சமாதானத்தையும் கட்டளையிடுவீராக.

நெருக்கத்திலிருந்தும் ஆபத்திலிருந்தும் விடுதலை கொடுப்பீராக. உம்மை நோக்கி பார்க்கிற உம்முடைய பிள்ளைகளுக்கு ஆண்டவரே உம்முடைய இரட்சிக்கும் சந்தோஷத்தை கொடுத்து ஆசிர்வதிப்பீராக. நாங்கள் மனுஷனிடத்திலே அல்ல. ஜுவனுள்ள ஆண்டவரிடத்திலே இரக்கத்திற்காக கிருபைக்காக கெஞ்சி நிற்கிறோம். நீர் எங்களோடு கூட இருப்பீராக. பெரிய காரியங்களை செய்யும் ஏசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com