நான் யார்?
டி.என்.ஏ என்பது பிராணவாயுவற்ற ரைபோ கரு அமிலம் ஆகும். உங்கள் டி.என்.ஏ உங்களுக்கு முன்னர் தெரியாத முன்னோர்களையும், உங்கள் இன கலவையையும், உங்களுக்கு வெளிப்படுத்த முடியும். இது எப்படி சாத்தியம்? மேலும் படியுங்கள்.
இவ்வுலகில் நாம் பல்லாயிரமாண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் மனித இனம் இந்த பூமியில் அனைத்து இடங்களிலும் பரவி வாழ்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், நம் ஒவ்வொருவரிலும் நமது முன்னோர்களின் மூலகூரைப்பற்றின தகவல் நம் டி.என்.ஏவில் ஒரு சிறுக்கூறாக பின்னப்பட்டுள்ளது.
முன்னோர்களைப்பற்றி டி.என்.ஏ மூலம் நாம் என்ன தெரிந்துகொள்ள முடியும்? ஒரு தனிமனிதரின் டி.என்.ஏ அவனது/அவளது பெற்றோர்களிடம் இருந்து பெறப்படுகிறது. அம்மாவிடமிருந்து 50%மும் அப்பாவிடமிருந்து 50%மும் சரிபாதியாக பெறப்படுகிறது. இந்த டி.என்.ஏ இணைப்புச் செயல்பாடு பிள்ளைப்பேற்றின்மூலம் பல்லாயிரமாண்டுகள் நடந்து கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் நாடோடிகளாக வாழ்ந்த நாட்களில் பலதடவை இடம் பெயர்ந்திருப்பார்கள். இதனால் அவர்களின் டி.என்.ஏ தங்கள் குடியேறிய இடங்களில் ‘தக்கனபிழைத்துவாழ்தல்’ என்ற அடைமொழிக்கேற்ப பல முறை பல்வேறு காரணங்களுக்காக மாற்றமடைய வாய்ப்பிருந்திருக்கும். தக்கனபிழைத்துவாழ்தலுக்கான சில காரணிகள்: சுற்றுப்புறச்சூழல் மாற்றங்கள், மனித குடியிருப்பு பகுதி, மரபணு மாற்றங்கள், இனக்கலப்பு, பேரழிவு மற்றும் பெரும் தொற்றுநோய்கள்.
இந்த மாற்றங்களினால் ஒவ்வொரு மனித குடியிருப்பு பகுதிக்கும் ஒரு தனித்தன்மை அந்த பகுதியில் பிழைப்பதற்கு டி.என்.ஏவில் இருக்கும். இதன்மூலம் ஒரு தனிநபரின் குடும்ப வரலாற்றை அறிய முடியும். டி.என்.ஏ சோதனையின் மூலம் கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துக்கொள்ளலாம்:
1. எனது மூதாதயர் உலகின் எந்தெந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்?
2. நான் எந்த இனத்தை சேர்ந்தவன்/ள்?
3. என்னுடைய அறியப்படாத உறவுகளை அடையாளம் காண முடியுமா?
4. என் குடும்ப வரலாறு ஆராய்ச்சி செய்ய முடியுமா?
5. நான் எந்த நாட்டை சேர்ந்தவன்/ள்?
படம் : By Arek Socha, Lance87 [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.