நன்மை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இந்நாளின் ஜெபத்தை தாவீது நமக்கு கற்றுகொடுக்கிறார். இரண்டு சாமுவேல் பதினாறாம் அதிகாரம் பனிரெண்டாம் வசனத்திலே ஒருவேளை கர்த்தர் என் சிறுமியை பார்த்து இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்கு பதிலாக எனக்கு நன்மையை சரிகட்டுவார்.

என் சிறுமியை பார்த்து கர்த்தர் எனக்கு நன்மையை சரிகட்டுவார் என்று சொல்கிறதை நாம் பார்க்கிறோம். தாவீது ராஜாவினுடைய குமாரர்களில் ஒருவனாகிய அப்சலோன் ராஜாவுக்கு எதிராக தன்னுடைய நண்பர்களை உருவாக்கி வீரர்களை ஆயத்தபடுத்தி அங்கே எப்ரோனிலே ஒன்றுகூடி ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமான காரியங்களை செயல்படுத்துகிறான். எரிசலேமில் இருந்து வந்ததான நண்பர்கள் தாவீதுக்கு ஆலோசனை கர்த்தராகிய தொப்பேல் போன்றதான பெரியவர்கள் எல்லாரையும் தன்வசப்படுத்தி கொண்ட அப்சலோன் அவர்களுக்கு முன்பாக தன்னை ராஜாவாக அபிஷேகம் பண்ண சொல்கிறான். அப்படிப்பட்ட காலத்திலே தாவீது அப்சலோனுக்கு பயந்து எல்லாவற்றையும் விட்டு அரண்மனையை விட்டு வனாந்தரத்திற்கு நேராக செல்கிறான். அங்கே சீமை என்று சொல்லப்பட்ட ஒரு மனுஷன் பெண்ணியம் கோத்திரத்தான் தாவீதை நிந்திக்கிறான். தூஷிக்கிறான். புழுதி வாரி இறைக்கிறான். கற்களை கொண்டு ராஜாவின் பேரிலே வீசுகின்றான். தாவீதுனுடைய மனுஷர்கள் தாவீதுகூடதான் இருக்கிறார்கள். நடந்து கொண்டு போய்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் துணிகரத்தினாலே தாவீதை அவ்வளவாக நிந்திக்கிறான்.

தாவீதுனுடைய வீரர்கள் இந்த சீமையை கொன்றுபோடட்டுமா என்று சொன்னதற்கு வேண்டாம், அவனை கொன்று போட வேண்டாம். அவன் நிந்திக்கட்டும் அவன் என்னை நிந்திக்கட்டும் என்று சொல்லி கர்த்தர் அவனை அனுமதித்து இருக்கிறார். ஆகவே அந்த நிந்தினையை காண்கிற கர்த்தர் கேட்கிற கர்த்தர் எனக்கு நன்மை செய்வார். என்னை ஆசிர்வதிப்பார் என்று சொல்லி அவன் ஜெபிக்கின்றான்.

பகைவர்களையும் எதிராளிகளையும் நம்மை அவமானப்படுத்துகிறவர்களையும் நாம் ஆண்டவருடைய சன்னத்திலே நாம் ஒப்படைக்க வேண்டும். கர்த்தர் நீதி செய்வார்.

இரக்கமுள்ள ஆண்டவரே! எங்களுடைய நிந்தனைகளை நீர் அறிவீர். நண்பர்களால் உறவினர்களால் தெரிந்தவர்களால் எங்களுக்கு ஏற்படுகிற நிந்தனைகள், அவமானங்கள், பரிகாசங்கள் எல்லாவற்றையும் நீர் கேட்டு இருக்கிறீர். பார்த்து இருக்கிறீர். நீர் நீதி செய்யும். எங்களுடைய துக்கத்தை மாற்றும். எங்களுக்கு உம்முடைய நீதியின்படி நன்மை செய்து எங்களை ஆசிர்வதிப்பீராக. எங்களுக்கு இரக்கம் பாராட்டுவீராக. கிருபையாய் இருப்பீராக. எங்கள் நன்மைகள் எல்லாவற்றையும் எங்களுக்கு கட்டளை இடும், ஏசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com