தேவனுடைய ஆசிர்வாதம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக! இந்த நாளின் ஜெபத்தை ஆபிரகாம் ஏறெடுக்கிறதாக நாம் பார்க்கிறோம்.

ஆதியாகமம் புஸ்தகம் பதினெட்டாம் அதிகாரம் மூன்றாவது வசனத்திலே, ஆண்டவரே! உம்முடைய கண்களில் கிருபை கிடைத்ததானால் நீர் உமது அடியேனை விட்டு கடந்து போக வேண்டாம், ஆண்டவரே நீர் அடியேனை விட்டு கடந்து போக வேண்டாம் என்று சொல்லி ஆபிரகாம் வேண்டிக்கொள்கிறான்.

அமரையின் சமபூமியிலே உஷ்னமான வேளையிலே ஆபிரகாம் தன்னுடைய கூடாரத்தின் முன்பாக மரநிழலிலே உட்கார்ந்து இருக்கிறபொழுது அவனுக்கு எதிராக மூன்று புருஷர்கள் காணப்படுகிறார்கள்.  மூன்று புருஷர்கள் என்று சொன்னால் பிதாவாகிய தேவன், குமாரனாகிய கிருஸ்த்து, பரிசுத்த ஆவியாகிய ஆண்டவர் என்று நாம் பொருள்படலாம்.  இந்த காட்சியைக் கண்ட ஆபிரகாம் உடனடியாக அவர்களுக்கு எதிராக ஓடி அவர்களுக்கு முன்பாக பணிந்து, குனிந்து ஆண்டவரை நோக்கி விண்ணப்பம் செய்கிறான். ஆண்டவரே!உன்னுடைய கண்களில் கிருபை கிடைத்ததானால் நீர் உமது அடியேனை விட்டு கடந்து போக வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறான்.  தான் இருக்கிற இடத்திற்கு அவர்களை அழைக்கிறான். தன்னை தேடி வந்த கர்த்தரை அழைக்கிறான்.  தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறான். அவனுடைய வார்த்தையை கேட்டு கர்த்தர் அவனோடுகூட கடந்து சென்று, அந்த மரநிழலிலே உட்கார்ந்து அவனோடுகூட பேசிக் கொண்டு இருக்கிறார். அவர்களுக்காக அங்கே உணவு ஆயத்தப்பண்ணப்படுகிறது.  சமைத்த உணவை கொடுத்த பொழுது அவர்கள் ருசித்து அவனை ஆசிர்வதிக்க கடந்து செல்கின்றதை நாம் பார்க்கிறோம்.  தேவனுடைய ஆசிர்வாதம் நம்முடைய வீட்டை தேடி வருகிறது.

கர்த்தர் சொல்கிறார், உற்பகல் காலத்திட்டத்திலே உன் மனைவியாகிய சாரா ஒரு குமாரனை அணைத்துகொண்டிருப்பாள் என்று சொல்லி ஒரு பெரிய வாக்குதத்தத்தை கர்த்தர் ஆபிரகாமிற்கு கொடுக்கிறார். இது ஒரு பெரிய நன்மை. எவ்வளவு பெரிய ஆசிர்வாதம் நம்முடைய வீட்டை தேடி வருகிறது பாருங்கள். ஆகவே கர்த்தர் நமக்கு வேதவசனங்களை கொடுக்கிறபொழுதோ, அல்லது காட்சி தரிசனங்களை கொடுக்கிறபொழுதோ அதை நாம் அல்லல் தட்ட வேண்டாம். அதிலே கவனம் செலுத்துவோம். கர்த்தர் ஒரு நோக்கத்தோடு ஒரு பெரிய திட்டத்தோடுகூட தம்முடைய வார்த்தைகளை நமக்கு கொடுக்கிறார். அவருடைய ஆசிர்வாதத்தை நாம் சுதந்தரித்து கொள்ள வேண்டும். கர்த்தர் நமக்கு எப்போதும் ஆனவராய் இருப்பாராக! கிருபையுள்ள ஆண்டவரே உம்மை ஸ்தோத்திக்கிறோம், நன்றி செலுத்துகிறோம், இரண்டாவது நாள் ஜெபத்தின் நன்மைகளை எங்களுக்குத் தாரும்.

ஆண்டவரே! உம்முடைய கண்களில் கிருபை கிடைத்ததானால், எங்களைவிட்டு கடந்து போக வேண்டாம். எங்களோடுகூட இருப்பீராக! எங்களுடைய குடும்பத்து மக்களோடுகூட இருப்பீராக! உம்முடைய மேலான சித்தத்தை திட்டத்தை எங்களிலே நிறைவேத்துவீராக! நன்மையான காரியங்களினால் எங்களை ஆசிர்வதித்து எங்களை சந்தோஷப்படுத்துவீராக! ஏசுவின் நாமத்தினால் பிதாவே! ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com