தூய இருதயம்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் இருபத்தி ஆறு, ஆறு, ஏழில் கர்த்தாவே! நான் துதியும் சத்தத்தை துணிக்கப் பண்ணி உம்முடைய அதிசயங்கள் எல்லாம் விபரிப்பதற்காக நான் குற்றமில்லாமலே என் கைகளை கழுவி உம்முடைய பீடத்தை சுற்றி வருகிறேன். இது தாவீதுனுடைய ஒரு மனதுருக்கம் உள்ள ஜெபமாக அமைந்திருக்கிறது.
நான் உம்மை துதித்து உம்மை போற்றி புகழ்ந்து உம்மை மகிமைப்படுத்துகிறேன். உமக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். உம்முடைய அதிசய கிரியைகளை எல்லாம் சொல்லி விபரித்து வருகிறேன். ஆனாலும் ஆண்டவரே! நான் என்னுடைய கைகளை சுத்தமாகவும், இருதயத்தை தூயதாகவும் வைத்துகொள்ள நான் பிரயாசப்படுகிறேன். என் கையின் கிரியைகள் பாவ சேற்றிலே விழுந்துவிடக்கூடாது, பாவ கிரியைகளிலே அது அழுக்கடைந்துவிடக்கூடாது. ஆகவே உம்முடைய இரத்தத்தினால் கழுவுவதற்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன். குற்றமில்லாமையிலே என் கைகளை கழுவி உம்முடைய பீடத்தை சுற்றி வருகிறேன்.
ஆம் ஆண்டவரே! தூய்மையான இருதயம் சுத்தக் கரங்கள் இது நீர் என்னிலே எங்களிலே எதிர்பார்க்கிறீர். அதற்காக என்னை தாழ்மைப்படுத்துகிறேன். என்னை மன்னிப்பீராக. கழுவுவீராக. சுத்தப்படுத்துவீராக. உமக்கு பிரியமான பாத்திரமாக எடுத்து பயன்படுத்துவீராக. இதை போன்று ஜெபத்தை ஏறெடுக்கிற சகோதரனுக்கும் சகோதரிக்கும் நீர் உதவி செய்வீராக. ஜெபத்தை கேட்கிற கர்த்தர் அவரவர் இடத்திலே இருக்கிற மனதின் பாரங்களை சஞ்சலங்களை நீக்கி போட்டு அவர்களுக்கு சந்தோஷத்தை மகிழ்ச்சியை கொடுத்து எங்களை ஆசிர்வதிப்பீராக. சமாதானத்தின் தேவன் தம்முடைய பிள்ளைகளோடுகூட இருக்க வேண்டுமாக நாங்கள் ஜெபிக்கிறோம்.
இரக்கமுள்ள ஆண்டவரே! இந்த ஜெபத்தை கேட்பீராக. நாங்கள் தூய்மையாக வாழ்ந்து உமக்கு மகிமை சேர்க்க அருள் செய்வீராக. இதேபோன்று உம்மை நோக்கி மன்றாடி வேண்டிக்கொள்கிற சகோதரனுக்கும், சகோதரிக்கும் நீர் நன்மை செய்து ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்த வேண்டுமாக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்