துக்கம்
இன்றைய நாளில் யாப்பேசின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். ஒன்று நாலகமம் நாலாவது அதிகாரம் பத்தாவது வசனத்திலே, “தேவரீர்! என்னை ஆசிர்வதித்து என் எல்லையை பெரிதாக்கி உமது வலது கரம் என்னோடு இருந்து தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கி காத்தருளும்”, இந்த ஜெபத்தை யாப்பேசு ஏறெடுக்கிறான்.
யாப்பேசின் தாய் ஒரு யூத பெண்மகள். அவள் கர்ப்பந்தரித்த நாள் முதலாக அவள் பல துக்கங்களை, இன்னல்களை, வேதனைகளை அடைந்து வருகிறாள். உற்றார்களாலோ உறவினர்களலோ பெந்து ஜனங்களாலோ அவளுக்கு பல வேதனைகள் உண்டாகிறது. பத்து மாத காலமாக அந்த குழந்தையை கருவிலே சுமக்கிற காலங்களிலெல்லாம் நிகண்ட துக்கத்தின் மத்தியிலேதான் அவள் கடந்து வருகிறாள். ஆனாலும் குறிக்கப்பட்ட நாளிலே ஆண்டவர் ஒரு ஆண்மகனை கொடுக்கிறார். அந்த துக்கத்தினோடுகூட அந்த மகனை பெற்றெடுத்தேன் என்று சொல்லி அந்த குழந்தைக்கு யாப்பேசு என்று பெயரிடுகிறாள். ஆனால் அவன் வளர்ந்து தன்னுடைய சகோதரர்கள் மத்தியிலே ஒரு நல்ல மதிப்பிற்குரியவனாக நல்ல அந்தஸ்துக்குரியவனாக பெருமைக்குரியவனாக காணப்படுகிறான்.
யாப்பேசும் கடவுள் பேரிலே பற்றுதலுக்குரியவன் நம்பிக்கையுடையவன் கர்த்தரை நோக்கி ஜெபிக்க வாஞ்சையுள்ளவன். இவ்வளவு நல்ல குணாதிசியங்களை உடைய யாப்பேசு கர்த்தரிடத்திலே ஒரு மன்றாடலை வைக்கிறான். தேவரீர்! நீர் என்னை ஆசிர்வதித்து என் எல்லையை பெரிதாக்கி உமது கரம் என்னோடுகூட இருந்து தீங்கு என்னை துக்கப்படுத்தாதபடிக்கு, அதற்கு என்னை விலக்கி காத்தருளும் என்று சொல்லி அவன் வேண்டிக்கொள்கிறான். கர்த்தர் இந்த ஜெபத்தை கேட்கிறார். அவருடைய வாஞ்சைகளை நிறைவேற்றுகிறார். நாமும்கூட உலகப்பிரகாரமான இந்த உலகத்திலே நாம் வாழ்கிறபொழுது நம்முடைய துக்கங்களை நெருக்கங்களை ஆண்டவரின் சமூகத்திலே சொல்வோம். கர்த்தர் நம்முடைய ஜெபத்தை கேட்பார். உம்முடைய வாழ்க்கையிலே இருக்கிற இடர்பாடுகளை எடுத்து போடுவார். வேதனைகளை நீக்குவார். சந்தோஷப்படுத்துவார்.
இரக்கமுள்ள ஆண்டவரே! உம்மை நோக்கி கூப்பிடுகிற உம்முடைய பிள்ளைகளின் ஜெபத்திற்கு நீர் பதில் கொடுப்பீராக. நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் உம்முடைய சமூகத்திலே உம்முடைய பிள்ளைகள் ஏறெடுக்கிற ஜெபத்திற்கு நீர் நன்மையான பதில்களை கொடுத்து அவர்களை ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக. கர்த்தர் தம்முடைய மக்களுடைய விசுவாசத்தை நீர் வருத்திக்க பண்ணுவீராக. பெரிய காரியங்களை செய்யும் ஏசுவின் மூலம் ஜெபிக்கறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்