தாவீதின் கலக்கம்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இன்றைய ஜெபத்தை தாவீதின் வார்த்தைகளால் நாம் தியானிக்க இருக்கிறோம். இரண்டு சாமுவேல் இருபத்து நான்காம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே இதோ நான் தான் பாவம் செய்தேன் நான் தான் அக்கிரமம் பண்ணினேன். இந்த ஆடுகள் என்ன செய்தது உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாய் இருப்பதாக!
தாவீது தன்னுடைய தவறை உணருகிறான். இஸ்ரவேல் ஜனங்களினுடைய மொத்த எண்ணிக்கை என்ன? படைவீரர்களுடைய பலம் என்ன? என்பதை அறிந்துக் கொள்வதற்காக தாவீது படைத் தலைவனாகிய யோகாபு இடத்திலே சொல்லி எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்காக அனுப்புகிறான். இப்பொழுது இருக்கிறதை பாயர்க்களின் கர்த்தர் நூறு மடங்கு அதிகமாக இரட்டிக்கப்பண்ணுவாராக! என்று சொன்னப்போதிலும் தாவீது அதை அல்லல் தட்டிவிட்டான், எண்ணிக்கையைக் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது. அதைக் கேட்ட உடனே தாவீது கலங்கிப்போகிறான். எண்ணிகையிலே அல்ல, கர்த்தருடைய கிருபையிலே பலன் இருக்கிறது.
ஆண்டவருடைய அனுகிரகம் நம்மோடு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ளுகிறான். இதைக் கர்த்தர் அவனுக்கு பாடமாகவும் கற்றுகொடுக்க விரும்புகிறார். ஏழு வருஷ பஞ்சமோ அல்லது சத்ருக்கள் உன்னை மூன்று மாதம் துரத்தி உன்னை கலங்கம் பண்ணவேண்டுமோ அல்லது மூன்று நாள் கொள்ளை நோவு உன்னை சந்திக்க வேண்டுமோ எதை நீ தெரிந்துகொள்ள போகிறாய் என்று சொன்னப்பொழுது நான் கர்த்தருடைய கரத்திலே விழுவேனாக! என்று சொல்லி அவன் தன்னை ஆண்டவருக்கு ஒப்புகொடுக்கிறான். மூன்று நாள் கொள்ளை நோவு ஆரம்பிக்கிறது. ஏதியாதேசம் முழுவதும் பிரஸ்தினாதேசத்திலும் அந்த கொடிய கொள்ளை நோய் பலரை கொன்று போடுகிறது.
கடைசியாக எரிசலேமுக்கு நேராக யூதன் தன்னுடைய கரத்தை ஓங்கி நிற்பதை கண்ட பொழுது அவன் கலங்குகின்றான். செத்து மடிகிற ஜனங்களை பார்த்த துக்கப்படுகிறான். நான் தான் பாவம் செய்தேன் நான் தான் அக்கிரமம் பண்ணினேன். இந்த ஆடுகள் என்ன செய்தது? உன்னுடைய கை எனக்கும், என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாக இருப்பதாக! என்று சொல்லி தன்னை அற்பணிக்கின்றான். நாம் துணிந்து சில காரியங்களை செய்கிறபொழுது ஆண்டவர் நம்மை உணர்த்துகிறார்.
சில தண்டனைகள் மூலமாக நமக்கு பாடங்களை கற்றுகொடுக்கிறார். நம்முடைய நீடுதலை உணருவோம். நம்முடைய தவறுகளை நாம் ஒத்துகொள்ளுவோம். நம்மை தாழ்மைபடுத்துவோம். இரக்கத்திற்காக கிருபைக்காக நாம் கெஞ்சுவோம். ஆண்டவர் நம்மோடு கூட இருப்பாராக! இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் உம்மை துதிக்கிறோம். நீர் எங்களை கற்றுகொடுக்கிறவர், போதிக்கிறவர், உணர்த்துகிறவர் சில தண்டனைகளினால் எங்களுக்கு நல்ல புத்தியை வரப்பண்ணுகிறவர். எங்களுக்கு உதவி செய்வீர்.
கர்த்தாவே! எங்களுடைய குற்றங்குறைகள் தேசத்திற்கும், ஜனங்களுக்கும் நீரிடாதபடி எங்களை தடுத்தார் கொள்ளுவீராக. நீர் எங்களுக்கு ஆலோசனை கர்த்தராய் இருந்து வழிநடத்த வேண்டுமாக நாங்கள் ஜெபிக்கிறோம். ஏசு கிருஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்