தாவீதின் உற்சாகம்
இன்றைய நாளில் தாவீதின் மற்றொரு ஜெபத்தை தியானிக்க இருக்கிறோம். ஒன்று நாலகமம் இருபத்தி ஒன்பதாம் அதிகாரம் பதினேழாவது வசனத்திலே, என் தேவனே! நீர் இருதயத்தை சோதித்து உத்தம குணத்தில் பிரியமாய் இருக்கிறீர் என்பதை அறிவேன். இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாய் கொடுத்தேன். இப்பொழுது இங்கே இருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனபூர்வமாய் கொடுத்திருக்கிறதை கண்டு சந்தோஷப்படுகிறேன் என்று தாவீது ஆண்டவரை மகிமைப்படுத்துகிறான். கர்த்தருடைய ஆலயப் பணிக்கு என்று சொல்லி ராஜா உற்சாகமாக கொடுக்கிறார்.
தம்முடைய ராஜ அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை கட்டாயப்படுத்தி ஜனங்களை நெருக்கி நான் எந்தவொரு உதவியையும் வாங்கவில்லை. மன உற்சாகமாக கொடுக்கிறான். அதற்கென்று பல வருஷங்களாக ஆயத்தப்படுகிறான். தன்னுடைய முயற்சியினால் ஆண்டவருடைய நாம மகிமைக்காக அவன் சேர்த்து வைக்கிறான். அந்த நல்ல குணாதிசயத்தை வெளிப்படுத்தி காட்டுகிறதை நாம் பார்க்கிறோம். அந்த உத்தம குணம், முழு இருதயம், முழு பலம் எந்த காரியத்திலும் நாம் அவ்விதமாக செயல்படுகிற பொழுது கர்த்தர் அதை ஆசிர்வதப்பார். நாம் அரைகுறைமனதோடு செய்கிறதை கர்த்தர் விரும்பவில்லை.
கொஞ்சம் கொடுத்தாலும் நிறைவாக கொடுத்தாலும் மன உற்சாகமாக கொடுக்கிற இடத்திலே கர்த்தர் பிரியமாக இருக்கிறார். வானத்தையும் பூமியையும் படைத்த தேவாதி தேவனுக்கு ஜுவனை கொடுத்த ஆண்டவருக்கு நாம் மகிமையான காரியங்களை கொடுத்து அவரை நாம் சந்தோஷப்படுத்துவோம்.
கிருபையுள்ள ஆண்டவரே! உங்களை நாங்கள் ஸ்த்தோத்திக்கிறோம். நீர் கொடுத்தவைகளில் இருந்து உம்முடைய நாம மகிமைக்கென்று உற்சாகமாக கொடுக்க எங்களுக்கு கற்று தாரும். கர்த்தாவே! வாஞ்சையுள்ள இருதயத்தை அறிந்து ஆசிர்வதிப்பீராக. இந்த ஜெபத்தை தியானிக்கிற கேட்டு கொண்டிருக்கிற ஒவ்வொரு மக்களுக்கு வேண்டிய நன்மைகளை கொடுத்து அவர்களை ஆசிர்வதிப்பீராக. உம்முடைய தயையுள்ள கரம் எங்களோடுகூட இருக்கட்டும். ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்