ஜுவன்
இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். சங்கீதம் முப்பதொன்பது நான்கில், கர்த்தாவே! நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்கு தெரிவியும். இது தாவீதினுடைய இன்னொரு வித்தியாசமனா ஜெபமாக அமைந்திருக்கிறது. நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்பதை உணரச்செய்யும் என்று சொல்லுகிறான். களிமண்ணாகிய என்னுடைய வாழ்வு உறுதியானது அல்ல, நிலையானது அல்ல, சலாகாலமும் ஜீவித்துக்கொண்டிருக்கக்கூடிய சத்துவமில்லை, மண்ணாக இருக்கிறோம்.
ஆண்டவரே! வெல்லத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, நாங்கள் எங்களுடைய கிரியைகளினாலே எங்களுடைய ஜீவனை நாங்கள் காத்துக்கொள்ளமுடியாதபடி இருக்கிறோம். மனிதனாக பிறந்த எவனும் மரித்துதான் ஆக வேண்டும். ஆகவே கர்த்தாவே! என்னுடைய ஜீவன் என்னுடைய காலங்கள் எல்லாம் உம்முடைய கரத்திலே இருக்கிறது. என்னுடைய ஆயுசுகாலம் எவ்வளவு என்பதை தெரிவியும். எங்களுக்கு சொல்லுவீராக. கர்த்தாவே! அதை உணரும்படி உங்களுடைய ஞான இருதயத்தை தாரும். எழுபது வருஷமோ, எண்பது வருஷமோ எவ்வளவு காலமோ அதை உணர்ந்துக் கொள்ளும்படியாக ஒரு உணர்வைத் தாரும் ஆண்டவரே.
நாங்கள் எங்களுடைய சாதூரியத்தினாலே சாமானியத்தினாலே எங்கள் காலங்களை நீட்டித்துக்கொள்ள முடியாது. நாங்கள் நாட்களை எண்ணக்கூடியவர்களாக இருக்கிறோம். அந்த நாட்களை எண்ணும் படியான அறிவைத்தாரும். அந்த முடிவின் காலத்தை எதிர்நோக்கத்தக்கதான முடிவைத்தாரும். கற்றுக்கொடுப்பீராக. கிருபையுள்ள ஆண்டவரே! எங்களை உமக்கு முன்பாக தாழ்த்துகிறோம். எங்களுடைய காலங்கள் எல்லாம் உம்முடைய கரங்களில் இருக்கிறது. நித்தம் நித்தம் புது பலனைக் கட்டளையிட்டு எங்களுடைய ஜீவனை நீட்டித்துக்கொடுத்து நாங்கள் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த அருளிச்செய்வீராக. உம்முடைய மேலான சித்தத்தை திட்டத்தை நிறைவேற்ற எங்களை நீர் கரம் பிடித்து வழிநடத்தி செல்லுவீராக. உம்மை நோக்கி மன்றாடுகிற உம் பிள்ளைகளுக்கு இரக்கம் பாராட்டும். கிருபை செய்து ஆசிர்வதியும். இயேசுவின் நாமத்தினால் பிதாவே ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்