ஜுவனுள்ள ஆண்டவர்
இந்த நாளில் யோபுவின் இன்னொரு ஜெபத்தை காண போகிறோம். யோபுவின் புஸ்தகம் நாற்பத்தி இரண்டாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே இந்த ஜெபத்தை காண்கிறோம். நான் என்னை அருவருத்து தூளிலும் சாம்பலில் இருந்து மனஸ்தாபப்படுகிறேன். தூளிலும் சாம்பலலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.
பக்தனாகிய யோபு உத்தமனாகிய நீதிமானாகிய யோபு புனிதமான வார்த்தைகளினால் ஆண்டவருக்கு முன்பாக தன்னை தாழ்த்துகிறான் என்று சொல்லி நாம் பார்க்கிறோம். நான் என்னை அருவருக்கிறேன் என்னை படைத்த ஜுவனுள்ள ஆண்டவருக்கு முன்பாக என்னை தரமட்டமாக தாழ்த்துகிறேன். என்னிலே எந்த மகிமையும் இல்லை என்னிலே பெருமை பாராட்டும்படியான காரியம் ஒன்றும் இல்லை.
நான் ஈசனும் அர்ப்பணுமாக காணப்படுகிறேன் என்று சொல்லி தன்னை தாழ்த்துகிறான். இன்னுமாக நான் தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன். மனிதர்கள் எல்லாரும் மிருக ஜுவன்கள் எல்லாத்தையும் மிதித்து அழுக்காக்கி போடுகிற துர்நாற்றம் பிடித்த அந்த மண்ணிலே தூசிலே நான் உட்கார்ந்து அதன் மேலே தூசிகொண்டு நான் உம்மை நோக்கி பார்க்கிறேன். நான் மனஸ்தாபம் கொள்கிறேன். தூசியை காட்டிலும் அழுக்கு நிறைந்த துர்நாற்றம் வீசின அந்த சேற்றை விட நான் சிறந்தவனல்ல. நான் மேன்மைக்குரியவனல்ல. நான் பாராட்டத்தக்கவனல்ல. அவ்வளவு அற்க்களிப்பான நிலையிலே நான் காணப்படுகிறேன்.
நீர் பரிசுத்தமுள்ள ஆண்டவர். நீர் நீதியுள்ள ஆண்டவர். பொறுமையுள்ள ஆண்டவர். உமக்கு முன்பாக ஆண்டவரே நான் ஒன்றுமில்லை. என்னை தாழ்த்துகிறேன். மனஸ்தாபப்படுகிறேன். நான் பேசினதை குறித்து மனஸ்தாபப்படுகிறேன். நான் செயலாற்றினதை குறித்து துக்கப்படுகிறேன். என்னை அருவருத்து தாழ்த்துகிறேன். கிருபையாக நோக்கி பார்க்கிறான்.
இரக்கமுள்ள ஆண்டவரே! அதிகமான பாரங்களோடும் கண்ணீரோடும் காணப்படுகிற ஒவ்வொரு மக்களுக்கும் நீர் செவிக்கொடுப்பீராக. அவருடைய ஜெபத்திற்கு ஏற்ற பலனை நீர் தந்தருளுவீராக. உம்முடைய தெய்வீக சந்தோஷம் சமாதானம் உம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் தேற்றட்டும் சந்தோஷப்படுத்தட்டும். கர்த்தர் அற்புதமான காரியங்களை செய்து அடையாளங்களை செய்து ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக. உம்முடைய நாமம் மகிமைப்படட்டும் கர்த்தாவே! எங்களை தரைமட்டும் தாழ்த்துகிறோம். கிருபையாய் இருப்பீராக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்