சூழ்ச்சி
இன்றைய நாளில் தாவீதன் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பதெட்டு இருபத்தொன்று இருபத்திரண்டில், கர்த்தாவே! என்னை கைவிடாதேயும், என் தேவனே எனக்கு தூரமாயிராதேயும் என் இரட்சகராகிய ஆண்டவரே எனக்கு சகாயம் செய்ய தீவிரியும். தாவீதினுடைய ஒரு விசேஷித்த ஜெபத்தை இங்கே பார்க்கிறோம்.
கர்த்தாவே! என்னை கைவிடாதேயும் என்னை சூழ்ந்துக்கொண்டிருக்கிறவர்கள் என்னை அழித்துவிடுவதற்காக, என்னை துக்கப்படுத்துவதற்காக, என்னுடைய விசுவாசத்தை நிலைகுலைய செய்வதற்காக இந்த பரிசுத்த வாழ்வை கெடுத்துவிடுவதற்காக பல சூழ்ச்சியான காரியங்களை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அதிரமான அக்கிரமக்காரங்கள் கைகளிலே என்னை விட்டு விடாதேயும். நீர் எனக்கு உதவி செய்யும். உம்முடைய வல்லிமையுள்ள கரத்தை நீட்டி என்னை மீட்டுக்கொள்ளும். நீர் எனக்கு தூரமாய் இராதேயும். நான் விண்ணப்பிக்கிற காரியத்தை கேட்க கூடாத தூரத்திற்கு நீர் சென்று விடாதேயும். என்னுடைய சத்தத்தைக் கேட்பீராக. மனதுருக்கமுள்ள ஆண்டவர், ஜெபத்திற்கு பதில் கொடுப்பீராக.
ஆண்டவரே! என்னுடைய ஜெபத்தை என்னுடைய வார்த்தை விரும்பாதவர்போல, தூர சென்றுவிடாதேயும் கர்த்தாவே! எனக்கு சமீபமாக வருவீராக. எனக்கு உதவி செய்யும் படியாக மனதிறங்கி வருவீராக. ஏழை பாவியாகிய எனக்கு இரக்கம் பாராட்டுவீராக. என்னை தேடி வருவீராக. என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்கு சகாயம் செய்ய தீவினியாக. பொல்லாதவர்கள் என்னை சூழ்ந்துக்கொண்டிருக்கிறார்களே, அக்கிரமகாரர்கள் என்னை அகம்பவம்படியான சூழ்ச்சிகளிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களே, நீரே எனக்கு விடுதலை தரும் படியாக, என்னை மீட்டுக்கொள்ளும் படியாக, எனக்கு அருகாமையிலே வருவீராக. எனக்கு உதவிசெய்யும் படியாக தருவீராக. உம்மை நோக்கி கெஞ்சிமைக்கிறேன். இரக்கமுள்ள ஆண்டவர் கிருபை பாராட்டுவீராக.
இரக்கமுள்ள ஆண்டவரே! என்னுடைய நெருக்கங்கள் எல்லாம் உமக்கு தெரியும். எல்லா சூழ்நிலைகளையும் நீர் அறிவீர். உங்கள் கண்களுக்கு மறைவானது ஒன்றும் இல்லை. இப்படிப்பட்ட நெருக்கமான சூழ்நிலைகளிலே ஆண்டவரே, நீர் தூர சென்று விடாமல் எனக்கு சமீபமாக வந்து உமது அன்பின் கரத்தை நீட்டி என்னை தூக்கி இரட்சிப்பீராக. என்னை விடுவிப்பீராக. உம்முடைய உதவிகளை ஒத்தாசைகளை கட்டளையிட்டு என்னை தாங்குவீராக நான் திக்கற்றவனாக உடையேன் என்று சொன்ன ஆண்டவருடைய வார்த்தையின் படியாக பலப்படுத்தும், சத்துரப்படுத்தும், உம்முடைய உதவிகளினால் எங்களை சந்தோஷப்படுத்தும். பெரியக் காரியங்களை செய்யும் ஏசு கிருஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.
ஆசிரியர்: போதகர் தேவசகாயம்