சிலுவையின் வார்த்தை 06:02 | முடிந்தது.
2. பாவ மன்னிப்பைக் கொடுத்து முடித்தார்.
எபிரேயர் 9:22 நியாயப் பிரமாணத்தின்படி கொஞ்சங் குறைய எல்லாம் ரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; ரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
எபிரேயர் 1:14 குமாரனாகிய அவருக்குள், அவருடைய ரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
தேவனாகிய கர்த்தர் மோசேயின் மூலமாக நியாயப் பிரமாணத்தையும் கட்டளைகளையும் கற்பனைகளையும் கொடுத்தார். ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் சரீர சுத்திகரிப்புக்காக, ஒரு புறாவையோ அல்லது ஒரு ஆட்டையோ, மாட்டையோ அடித்து அதன் ரத்தத்தைப் பரிகாரமாகச் செலுத்த வேண்டும். கர்த்தர் அதை அங்கீகரித்து சரீர சுத்திகரிப்பைக் கொடுப்பார். அதைப் போன்று ஒரு மனிதனுடைய ஆத்தும மன்னிப்பிற்காகவும் ஒரு ஆட்டையோ, மாட்டையோ அடித்து அதன் ரத்தத்தைப் பாவப் பரிகாரமாகச் செலுத்த வேண்டும். அடிக்கப்பட்ட ஆடு, மாடு இவைகளின் சரீரமோ அல்லது கொழுப்போ தகனிக்கப்பட வேண்டும். இதைக் கர்த்தர் ஏற்றுக்கொண்டு அந்த மனிதனுக்கு ஆத்துமாவிலே மன்னிப்பைக் கொடுப்பார். மனிதன் திரும்பத் திரும்ப பாவஞ் செய்யும் சுபாவமுடையவனாக இருக்கிறான். எனவே பலியிடுதலும், ரத்தஞ் சிந்துதலும் தொடர்ந்து தினமும் நடைபெற வேண்டியதாக இருக்கிறது.
எபிரேயர் 5:2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக் கொடுத்து, நம்மில் அன்புகூர்ந்தது போல…
எபிரேயர் 9:12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவர்களுடைய ரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த ரத்தத்தினாலும் ‘ஒரே தரம்’ மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
1 யோவான் 1:7 … இயேசுக் கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.
நாம் செய்த பாவங்களுக்காக வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளை நாம் பலியாகச் செலுத்துவதற்குப் பதிலாக இயேசு கிறிஸ்துவாகிய ஆண்டவர் தம்முடைய விலையேறப்பெற்ற ரத்தத்தை சுகந்த வாசனையான ஒரே காணிக்கையாகவும் பலியாகவும் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிதாவிடம் செலுத்தினார். இந்த இயேசுக் கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். இவ்விதமாக இயேசு கிறிஸ்து நமக்கு பாவ மன்னிப்பின் நிச்சயத்தைச் செய்து முடித்தார்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Geralt [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.