சிலுவையின் வார்த்தை 04:01 | என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?
மத்தேயு 27:46 ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு, “ஏலி! ஏலி! லாமா சபக்தானி”, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்” என்று அர்த்தமாம்.
முதல் வார்த்தையில் உலகத்து மக்கள் அனைவருடைய பாவங்களையும் மன்னிக்கும்படி பிதாவிடம் வேண்டினார். இரண்டாம் வார்த்தையில் தன்னோடு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த கள்ளன், ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்பொழுது அடியேனை நினைத்தருளும் என்றான். கள்ளனுடைய விண்ணப்பத்திற்குப் பதிலாக, இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்றார். மூன்றாம் வார்த்தையில் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்கு ஒரு பாதுகாப்பைக் கொடுப்பதற்காகவும் மரியாளை ஆறுதல்படுத்துவதற்காகவும், ஸ்திரீயே அதோ உன் மகன் என்று யோவானைக் காட்டினார், சீஷனே அதோ உன் தாய் என்று மரியாளைக் காட்டினார்.
நான்காம் வார்த்தையில் என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று பிதாவிடம் சத்தமாகக் கேட்கிறார்.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று இயேசு தனக்கும் பிதாவுக்கு இருக்கிற நெருக்கத்தை சொன்னவர் ஏன் என்னை கைவிட்டீர்? என்று கேட்கிறார்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Solarilucho [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.