சிலுவையின் வார்த்தை 03:05 | ஸ்திரீயே, அதோ, உன் மகன்.
5. இயேசு தன் தாய்க்கு கொடுத்த அன்பின் கட்டளை
யோவான் 19:26,27 ஸ்திரீயே, அதோ, உன் மகன்…
பெத்லகேமில் பாலகனாய்ப் பிறந்த இயேசுவை யூத முறைமையின்படி விருத்தசேதனம் செய்வதற்காக மரியாளும் யோசேப்பும் எருசலேம் தேவாலயத்திற்கு சென்றார்கள். கர்த்தருடைய ஏவுதலினால் எருசலேம் தேவாலயத்திற்கு சிமியோன் வந்து இயேசுவை தன் கைகளில் ஏந்தி கொண்டு கர்த்தரை ஸ்தோத்தரித்தான். கடைசியாக மரியாளைப் பார்த்து: உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவி போகும் என்றான். இந்த வார்த்தைகளையெல்லாம் மரியாள் நினைவுகூர்ந்து கல்வாரி சிலுவைக்கு முன் நிற்கிறாள். கணவனை இழந்த கைம்பெண்ணாகவும் தான் பெற்றெடுத்த செல்ல மகனின் மரணக் காட்சியை பார்க்கும் துக்கம் நிறைந்த பெண்ணாகவும் மரியாள் நிற்கிறாள்.
இந்த நேரத்தில் இயேசு தன் தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்று ஒரு பட்டயத்தை மரியாளின் இருதயத்தில் ஊடுருவி போகச் செய்கிறார். ஆனால் இந்த வார்த்தை மரியாளின் இருதயத்தை காயப்படுத்தவில்லை, மாறாக மரியாளின் ஆத்துமாவை தேற்றிற்று. இயேசு தன்னை இந்த உலகத்திற்கு அனுப்பின பிதாவினடத்திற்கு போகிறார். இதெல்லாம் பிதாவின் திட்டப்படி நடக்கிறது. மரியாள் தன் மகன் ஏசுவுக்கு அன்பாயிருந்த யோவான் சீஷனே மகனாகத் தன்னை கவனித்து கொள்ளப்போகிறதை ஏற்றுக்கொண்டாள்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
படம்: By Falco [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.