சிலுவையின் வார்த்தை 02:04 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்.
4. இயேசுவின் மேல் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தும் கள்ளன்.
லூக்கா 23:42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
இந்த கள்ளன் சிலுவையில் தொங்கினாலும் மனந்திரும்பின கள்ளனாக மாறுகிறான். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ ரட்சிக்கப்படுவான். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை இந்த கள்ளன் அறிந்து கொள்கிறான். தன் குற்றத்தை மறைத்து வைக்க விரும்பவில்லை. கிறிஸ்துவின் வெளிச்சத்தில் வெளிச்சம் கண்ட கள்ளனாகிறான். பிதாவே இவர்களை மன்னியும் என்று இயேசு சொல்லிய வார்த்தை இந்த கள்ளனுக்குள்ளாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த யேசுவால் தன்னுடைய பாவத்தை மன்னிக்க முடியும் என்பதை அறிந்து கொள்கிறான். மேலும் இந்த யேசுவால் தன்னுடைய மரணத்துக்குப் பின் ஒரு வாழ்வைக் கொடுக்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்கிறான். யேசுவாகிய ஆண்டவர் மனந்திரும்பினவர்களுக்கென்று ஒரு புதிய ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவார் என்பதையும் உறுதியாக நம்புகிறான். இயேசு ஏற்படுத்தப் போகிற ராஜ்ஜியம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்றும் தெரிந்து கொள்கிறான். இயேசு ஏற்படுத்தும் ராஜ்ஜியம் நித்தியத்துக்குரியது என்றும் அது என்னவென்றும் அழியாது என்றும், அவருடைய ராஜ்ஜியத்தில் சந்தோசம், மகிழ்ச்சி கிடைக்கும் என்றும் அறிந்து கொள்கிறான்.
எனவே இயேசு ஏற்படுத்தப்போகும் ராஜ்ஜியத்தில் தன்னையும் நினைத்து ஒரு நன்மையைத்தரும் என்று வேண்டிக்கொள்கிறான். “நீர் உம்முடைய ராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று மனந்திரும்பின கள்ளன் தன் விசுவாச அறிக்கையை வெளிப்படுத்தினான். ஏசுவும் அவன் வார்த்தையை அங்கீகரித்தார்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By Fietzfotos [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.