சிலுவையின் வார்த்தை 02:02 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்.
ஆன்மிகம் | சிலுவையின் வார்த்தை 02:02 | இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்.
2. தவறைக் கண்டித்த கள்ளன்
லூக்கா 23:40 மற்றவன் அவனை நோக்கி, நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
யேசுவோடு சிலுவையில் இரண்டு கள்ளர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள். இவர்கள் பல திருட்டு, கொள்ளை, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள். இவர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவரும் பரபாசைவிடக் கொடியவர்களாகக் காணப்பட்ட படியினால் சிலுவையில் அறையப்பட்டார்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை சிலர் நிந்தித்தார்கள்.
பரியாசம் பண்ணினார்கள். இதைக்கண்ட கள்ளனும் இயேசுவை நிந்திக்கிறான். பரியாசம் பண்ணுகிறான். நீர் கிருஸ்துவானால் உன்னையும் எங்களையும் ரட்சித்துக் கொள் என்கிறான். இதைக்கேட்ட மற்ற கள்ளன், அவனுக்குக் கிடைத்த தண்டனையை சுட்டிக் காட்டுகின்றான். நீ சமுதாயத்தில் நடப்பித்த பொல்லாத கிரியைகளுக்குத்தக்கதாக நியாயமான தண்டனையாக சிலுவையில் அறையப்பட்டிருக்கிறாய். ஆனால் உன் அருகில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு இந்த தண்டனைக்குரியவர் அல்ல. உன் மேலும் என் மேலும் கூறப்பட்ட குற்றச்சாட்டை விசாரித்து சிலுவைத் தண்டனையை உறுதிப்படுத்த பல மாதங்கள் ஆயிற்று. ஆனால் இயேசுவின் மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை இரவோடு இரவாக விசாரித்தார்கள். ஒரு குற்றச்சாட்டும் உண்மையென்று சாட்சிகளாலும் நிரூபிக்க முடியவில்லை. இந்த இயேசு தன்னைக் கிறிஸ்து என்றும் மனுஷ குமாரன் என்றும் சொன்ன ஒரே காரணத்திற்காக வேதபாரகர்களும், ஆசாரியர்களும், அவர் பேரில் பொறாமை கொண்டு அவரைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று தீர்மானித்தார்கள். இந்த இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தையைக் கவனித்தாயா? பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது அறியாதிருக்கிறார்களே என்றார். இதன் பொருள் என்ன? நாம் அறிந்தும், துணிந்தும் செய்த அக்கிரமங்களுக்குத் தண்டனை கொடுக்காமல் இவர்களுக்கு மன்னிப்பு கொடும் என்று கேட்கிறாரே. இவர் மன்னிக்கிற தெய்வம். இந்த தெய்வத்துக்கு முன் குற்றவாளியாக நிற்கிறோமே என்று பயம் உனக்கு உண்டாகவில்லையா? என்று கூறுகின்றான். இதைக் கேட்ட கள்ளன் தான் செய்த குற்றங்களை சரியென்று ஒத்துக் கொள்ளும் மனமில்லாதிருக்கிறான்.
தொடரும்…
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும்.
புத்தகம்: சிலுவையின் ஏழு வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும். படம்: By lechenie-narkomanii [வணிக பயன்பாட்டிற்கு இலவசம், பட உரிமையாளரை மேற்கோள் காட்ட வேண்டியதில்லை], via CC0 கிரியேடிவ் காமன்ஸ், பிக்சாபே.காம் வலைத்தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.