சந்ததி

இன்றைய நாளில் எலிசாவின் ஜெபத்தை நாம் தியானிக்க இருக்கிறோம்.  இரண்டு ராஜாக்கள் நான்காம் அதிகாராம் பதினாராவது வசனத்திலே ஒரு பிராணவ உட்பவ கால திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துகொண்டிருப்பாய்.

எலிசா தீர்க்கத்தரிசி தன்னுடைய பணியாளாகிய கேயாசியையும் அழைத்துகொண்டு சோனேம் என்னும் ஊருக்கு செல்லுகிறார்கள்.  அங்கே அந்த ஊரிலே கணம் பொருந்திய ஒரு ஸ்திரி இருக்கிறாள்.  தீர்க்கத்தரிசியைப் பார்த்தவுடனே அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு விருந்துக் கொடுத்து உபசரிக்கிறாள்.  இந்த பரிசுத்தவானாகிய ஊழியக்காரனக்கு என்று சொல்லி தன்னுடைய வீட்டின் மாடியிலே மேல் அறையையும் ஆயத்தப்படுத்த தன்னுடைய கணவனாரிடத்திலே சொல்லுகிறாள்.  அவரும் செய்துகொடுக்கிறார்.  இவ்விதமாக தீர்க்கத்தரிசியாகிய எலிசா அந்த பகுதியிலே வருகிறபொழுதெல்லாம் ஸ்னோமிலியாளுடைய வீட்டிலே வந்து தங்கியிருப்பார்.  அவர்கள் கொடுக்கிறதை ருசித்து  சந்தோஷப்படுவார் ஒருநாளிலே எலிசா தீர்க்கத்தரிசி கேயாசினிடத்திலே கேட்கிறார், இந்த அருமையான மகள் நம்மை இவ்வளவு தூரம் கவனித்து நமக்கு பணிவிடை செய்கிறாளே நாம் அவளுக்கு செய்ய வேண்டிய உபகாரம் உதவிகள் ஏதாகினும் உண்டா என்று சொல்லுகிறபொழுது கேயாசின் மூலமாக தெரிந்துகொள்கிறான் ஸ்னோமிலியாளுக்கு குழந்தை இல்லை என்பதை ஆகவே, ஸ்னோமிலியாவை அழைத்து வரச்சொல்லி ஒரு ப்ராணவ உட்பவ கால திட்டத்திலே ஒரு குமாரனை நீ அணைத்துகொண்டிருப்பாய் என்று சொல்லி எலிசா அவளை ஆசிர்வதிக்கிரதை நாம் பார்க்கிறோம்.  இது ஒரு ஆசிர்வாதமான ஜெபமாக மாறுகிறது.

இருதயத்தினுடைய நினைவே ஒரு விண்ணப்பமாக வேண்டுதலாக மாறுகிறது.  கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனுடைய வார்த்தையை ஜெபத்தை கணப்படுத்தி அற்புதங்களை செய்து அடையாளங்களை செய்து ஆசிர்வதிக்கிறார்.  ஒரு குடும்பத்தை கட்டி எழுப்புகிறார் ஒரு சந்ததியை பெருகப்பண்ணுகிறார்.  கர்த்தாவே! இந்த எலிசாவினுடைய ஜெபத்தை நாங்களும் ஏற்றுகொள்கிறோம்.  அதை தியானிக்கிறோம்.  அந்த நன்மைகளை எங்களுக்கும் தாரும்.

ஸ்னோமிலியாவிற்கு கொடுத்ததை போன்று எங்களுடைய குடும்பத்து மக்களுக்கும் உத்திரபாக்கியத்தைகொடுத்து, அவர்களை நீர் ஆசிர்வதிப்பீராக சந்ததியை பெருக பண்ணுவீராக!  இல்லாதவைகளை இருக்கிறதை போல் அழைக்கிற எங்கள் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் அற்புதங்களை செய்து அடையாளங்களை செய்து ஆசிர்வதித்து சந்தோஷப்படுத்துவீராக!  உம்முடைய கிருபை அவர்களை தாங்கட்டும். பெரிய காரியங்களை செய்யும் இந்த தியான ஜெபத்தை ஏறெடுக்கிற ஒவ்வொருடைய குடும்பத்திலும் எல்லா நன்மைகளையும் ஏராளமாய் அருளச்செய்து அவர்களை ஆசிர்வதிப்பீராக!  ஏசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com