சத்ருக்கள்

இன்றைய நாளில் யோசேபாத் ராஜாவின் ஜெபத்தை தியானிக்க போகிறோம். இரண்டு நாலாகமம் இருபதாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலே, எங்களின் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே! பரலோகத்தில் இருக்கிற நீரல்லவோ தேவன். தேவரீர்! ஜாதிகளுடைய ராஜ்ஜியங்கள் எல்லாம் ஆளுகிறவர்.

உம்முடைய கரத்திலே வல்லமையும் பலாக்கிரமும் இருக்கிறது. ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்க முடியாது. இந்த ஜெபத்தை யோசேபாத் ராஜா ஏறெடுக்கிறார். நோவா புத்திரரும் அம்மோன் புத்திரரும் பெருந்திரளான படைவீரர்களோடுகூட விழாவின் ராஜாவாகிய யோசேபாத்திற்கு நேராக யுத்தத்திற்கு வந்து நிற்கிறார்கள். அந்த நேரத்திலே பெரும்படையின் எண்ணிக்கையை கேள்விப்பட்டு யோசேபாத் ராஜா பயந்து ஆண்டவருடைய சமூகத்திலே கடந்து சென்று உபவாசத்தை ஜனங்கள் மேற்கொள்ளும்படியாக சொல்கிறான்.

ஆண்டவருடைய கிருபையை தேடுவதற்காக இங்கே கூடி வந்தார்கள். சத்ருக்களுடைய போராட்டத்திலிருந்து யுத்த களத்திலிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டுமென்று சொல்லி ஜெபிப்பதற்காக இங்கே கூடி வந்தார்கள். எங்களின் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே நீர் பரலோகத்தில் இருக்கிறவர் அல்லவா நீரே தேவாதி தேவன் ஜாதிகளையெல்லாம் ஆளுகிறவர். உம்முடைய கரத்திலே வல்லமையும் பலாக்கிரமும் இருக்கிறது. ஒருவனும் உம்மோடு எதிர்த்து நிற்க முடியாது. நீர் சேனைகளின் கர்த்தர் நீர் சர்வ வல்லமையுள்ள தேவன் உலகத்தினுடைய ராஜ்ஜியங்கள் ராஜாக்கள் எல்லா அதிகாரங்களையும் நீர் ஆளுகை செய்கிற தேவனாக இருக்கிறீர்.

உம்முடைய வல்லமையுள்ள கரம் உம்முடைய பிள்ளைகளாகிய எங்களுக்கு விடைபெற வேண்டும். நெருக்கத்திலே உம்மை நோக்கி கூப்பிடுகிறோம் என்று சொல்லி ஜெபிக்கின்றார்கள். கர்த்தர் இந்த ஜெபத்தை கேட்டார். இந்த ஒருமனப்பாட்டு கூட உபவாசித்து அவர்கள் மன்றாடி வேண்டி கொண்ட ஜெபத்திற்கு ஏற்ற பலனை கொடுத்தார். கர்த்தர் அற்புதங்களை செய்தார். அடையாளங்களை செய்தார்.

வல்லமையுள்ள ஆண்டவர் பலாக்கிரமமான காரியங்களை அவர்களுக்காக நடப்பித்தார். இதைபோன்று நாமும் நம்முடைய வாழ்க்கையிலே எத்தகையான போராட்டாங்களோ உபத்திரங்களோ சஞ்சலங்களோ வியாதிகளோ அதாவது பற்றாக்குறையான சூழ்நிலையிலோ வேலையில்லா திண்டாட்டமான காலங்களிலோ நமக்கு ஏற்பட்டாலும் நாம் சோர்ந்து போகாமல் கர்த்தரை நோக்கி நாம் மன்றாடி ஜெபிப்போம். நம்முடைய ஜெபத்தை கர்த்தர் கேட்பார். நம்மை ஆசிர்வதிப்பார். அவருடைய கிருபை நமக்கு உதவி செய்யும்.

கர்த்தாவே! இந்த வேளையிலும் எங்களை தாழ்த்தி நாங்கள் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். நீர் உதவி செய்கிறவர். உம்மிடத்திலே வல்லமை உண்டு. பலாக்கிரமம் உண்டு. கிருபை உண்டு. உம்முடைய பிள்ளைகளுடைய ஜெபத்திற்கு நீர் பதில் கொடுத்து நீர் தேற்றுகிறவராகவும் திடப்படுத்துகிறவராகவும் சத்ருக்களுடைய கைகளில் இருந்து விடுதலை கொடுத்து இரட்சிக்கிற தேவனாக இருக்கிறீர். கர்த்தாவே! இரக்கம் பாராட்டுவீராக. நறுங்கொண்ட நறுங்கொண்ட இதயத்தோடு பாரத்தோ கண்ணீரோடு கூடி வருகிற மக்களின் ஜெபத்திற்கு ஏற்ற பலனை தருவீராக. அதிசயங்களை நடப்பித்தருளும் எங்களை ஆசிர்வதித்தருளும். கிருபை எங்களோடு கூட இருப்பதாக. ஏசு கிறிஸ்து மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே. ஆமென். ஆமென்.

ஆசிரியர்: போதகர் தேவசகாயம்

 

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com